பக்கம்:தொழில் வளம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

தொழில் வளம்


அணிகளையும் குறிக்கலாம், வேளைதோறும் உடை நாகரிகம் மாறிவரும் இந்த நாளில் இருபது ஆண்டுகளுக்கு முன் நெய்த அதே வகையான ஆடைகளை ஒருவன் உற்பத்தி செய்து கொண்டிருந்தால் அதனால் அவனுக்கோ நாட்டுக்கோ நன்மை என்ன ? அப்படியே அச்சுத் தொழிலில் உலகை ஒத்துப் பலவகையில் மாற்றம்கண்டு கண்கவர் வகையில் படங்களுடன் நூல்கள் வரவில்லையாயின் பொதுமக்கள் விரும்புவதில்லையே. வெறும் படங்களை மட்டும் கண்டு வாங்கும் மக்கள் நிலையறிந்து லட்சக்கணக்கான நூல்களை அச்சிட்டு வெளியாக்கிப் பொருள் பெருக்கும் வணிகர் நம்மிடை இருக்கிறார்கள். இந்த வகையில் ஒன்றுமட்டும் சொல்லி மேலே சொல்லலாம். மேலே கண்ட ஆடை வகையோ, நூல் வகையோ அன்றித் திரைப்பட வகையோ பெரும்பாலான மக்கள் வெறி கொண்டு விரும்புகிறார்கள் என்பதற்காக மிக மட்டரகமாக உடல் உறுப்புக்களைப் புறத்தே காட்டும் ஆடைகளையோகெட்ட உணர்ச்சியைத் துண்டும் நூல்களையோ-ஒழுக்கம் கெட்ட சமுதாயத்தை வளர்க்க வழிகாட்டும் படங்களையோ-தயார் செய்து கொண்டு கலை வளர்க்கிறோமென்றாே தொழில் வளர்க்கிறோமென்றாே கூறுவார்களாயின் அவர்கள் தத்தம் நாட்டையும் சமுதாயத்தையும் நலிவுப் பாதையை நோக்கி ஈர்த்துச் செல்லுகின்றார்கள் என்பதே பொருள். இந்த வகையில் வரம்பை மீறுங் காலத்தில் அரசாங்கம் தலையிட்டுத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளது. அதற்கெனச் சட்டங்களும் குழுக்களும் நாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் அத்தகைய சட்டங்களும் குழுக்களும் தொழிற்படுகின்றனவா என்ற ஐயம் உண்டாகும் வகையில் இத்துறைகளில் வாணிபம் வளர்ந்து வருகின்றது. கல்லாத,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/301&oldid=1381992" இலிருந்து மீள்விக்கப்பட்டது