பக்கம்:தொழில் வளம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

தொழில் வளம்



இவ்வாறான துறைகளில் நாட்டில் உற்பத்தியாளர்கள் கருத்திருத்துவார்களேயானால் அவர்தம் பொருள்கள் சந்தைகளில் நன்கு விற்பனையாகி நாட்டு வாணிப வளன் பெருக வாயப்பு உண்டு, மேலை நாடுகள் பல உற்பத்தியாளர்கள் இவை போன்ற பல முறைகளைக் கையாண்டு உலக அரங்கிலே பெருவாணிபர்களாக உள்ளதைக் காணலாம். சிறப்பாக மோட்டார் உற்பத்தி போன்ற பெருந் தொழில்களிலும் அதன் துணைப் பொருள்களாகிய 'பெட்ரோல்' போன்றவற்றிலும் இந்த நிலையைக் காண்கின்றோம். நம் நாட்டிலும் அந்த வாடை வீசுவதை யாரே அறியாதார்?

சில உற்பத்தியாளர்கள் தத்தம் தொழில்களைப் பெருக்கப் பல்வேறு வகையில் தாம் தாம் விற்பனைக்கனுப்பும் பொருள்களுடன் பல விளக்கங்கள் அனுப்புவர். வேறு முறைகளுடன் முயற்சிகளையும் மேற்கொள்வர். அவை எவை எனக் காட்டுவர் அறிஞர்.*

1. Adding refinements
2. Making the size, quantity, or sale unit more convenient
3. Reducing or simplifying the line
4. Standardizing quality
5. Supplying full direction for use
6. Adding service features
7. Developing new uses

8. Artistic design

*A.W. Wills More P. 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/311&oldid=1381982" இலிருந்து மீள்விக்கப்பட்டது