பக்கம்:தொழில் வளம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

307



யைக் காண்கிறோம். ஒருவருக்கொருவர் போட்டியிட்டு விலை குறைத்தோ விளம்பரம் செய்தோ வேறு வகைகளைக் கையாண்டோ தத்தம் பொருள்களைச் சந்தைகளில் விற்பனை செய்ய முயல்வதைக் காண்கின்றோம். எனவே உற்பத்தியாளர்கள் தம் பொருள்கள் மற்றவற்றுடன் உண்டாகும் போட்டியில் நன்கு விற்பனையாக வேண்டுமானால் அவர்கள் பல நல்லவழிகளைக் கையாள வேண்டும். ஒரு சிலவற்றைக் கீழே காணலாம்.*

1. உற்பத்திச் செலவைக் குறைத்தல் (Reducing costs of Production)
2. பயன் திறத்தைப் பெருக்கல் (Increasing utility of Products)
3. பயன்படுத்தும் செலவினைக்குறைத்தல் (Reducing operative costs of users)
4. விற்பனை விளக்கம் விரிவாக்கல் (Improving sales appeal)
5. புது நுண்திறன் வழி வளமாக்கல் (Developing new technique information)
6. புது வருவாய் பெருக்கல் (Producing new business)
7. புதுத் துறைகளை வளர்த்த ல் (Developing new lines)

8. இணைப்பொருள்கள் உற்பத்தியும் உபயோகமும் (Discovering uses for by-Products)

* A. W. WILLS MORE, P. 13 & 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/310&oldid=1382022" இலிருந்து மீள்விக்கப்பட்டது