பக்கம்:தொழில் வளம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

தொழில் வளம்



7. Veriety of selection
8. Convenience of location
9. Special credit facilities
10. Guarantees

11. Special service or delivery features.

இவற்றின் அடிப்படைகளைக் கொண்டே பொருளைப் பயன்படுத்தும் மக்கள் தத்தம் தேவைக்கு வேண்டிய பொருள்களை வாங்குகின்றார்கள் எனக் காண்கின்ற காரணத்தால் எல்லாப் பொருள்களையும் உற்பத்தி செய்யும் அனைவரும் இவற்றின் அடிப்படையிலேயே தத்தம் உற்பத்திகளைச் செய்தல் வேண்டும். விலை ஒன்று மட்டும் வாணிபத்தில் முக்கியமில்லை என்றும் இன்னும் இவைபோன்று எத்தனையோவகைத் துணைச் சாதனங்களும் விளம்பரங்களும் பிறவும் தேவைப்படுகின்றன எனவும் அறிகிறோம். இவற்றின் உண்மைகளைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து உலகச் சந்தைகளில் அவர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்தியாவின் வடபகுதியிலும் பல வாணிபர்களும் தொழிலதிபர்கள் இவற்றைக் கொண்டு முன்னேற்றமடைகின்றனர். தமிழ்நாட்டு வணிகரும் பெரும் தொழிற்சாலை அதிபர்களும் இன்னும் இவற்றில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். உணர்ந்து கொண்டு தம்பணியை விரிவாக்கினால் வாணிபமும் தொழிலும் வளமுற்று நாடு நன்கு சிறக்கும்.

இன்று நாட்டிலும் உலகிலும் எல்லா உற்பத்திப் பொருள்களுக்குமே போட்டி உண்டாகியுள்ளமை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/309&oldid=1382026" இலிருந்து மீள்விக்கப்பட்டது