பக்கம்:தொழில் வளம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

தொழில் வளம்



தவணையில் வாங்க அதைக் கொடுப்பதோடு, தங்கள் ஆட்களைச் சில நாட்களுக்கு வாங்குபவர் வீடுகளுக்கு அனுப்பி, இலவசமாகப் பயிற்சி பெறவும் உதவுகின்றனர். இத்தகைய ஏற்பாட்டால் அவர்தம் வாணிபம் ஓரளவு வளர்ந்து வருவதையும் காண்கின்றோ மல்லவா!

உற்பத்தித் துறையில் பல நல்ல தன்மைகளைக் கண்டு தெளியவேண்டும். உற்பத்தி முறையைப் பெருக்கத் தேவையான இடங்களில் பெருக்கியும் அல்லா விடங்களில் சுருக்கியும் நல்ல பொருள்களைக் குறைந்த விலையில் நாட்டு மக்களுக்கு அனுப்ப வேண்டும். அதுதான் மக்களைத் தம்பொருள்களிடம் திருப்ப வழி. இடையில் அப்பொருள்களை வைத்து வாணிபம் செய்கின்றவர்களும் மகிழ்ச்சியோடு அதே பொருள்களை பக்களுக்கு அறிமுகம் செய்து விற்பனையை அதிகமாக்கித் தாமும் இலாபமடைந்து உற்பத்திப் பெருக்கத்தக்கும் வழி செய்தவராவார்கள். அவ்வாறான முறைக்கு ஒரு சிலவற்றை எண்ணிப் பார்க்கவேண்டும். ஒரு சில குறித்த அளவையில் தான்தேவையில்தான்-இம்மாற்றங்களைச் (Simplitication) செய்யவேண்டுமெனக் குறித்துள்ளனர். அவை வருமாறு.

1. The necessity to meet the needs of the consumer
2. Changes in style or fashion

3. The objections of distributors-Where there cannot be overcome

A. W. Wills More P. 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/313&oldid=1381987" இலிருந்து மீள்விக்கப்பட்டது