பக்கம்:தொழில் வளம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில் வளமும் பொருளாதாரமும்

321


கடமைப்பட்டவர்கள். பொருளாதார வல்லுனருக்கும் திட்டமிடும் திறனாளருக்கும் பிற செயல்வீரருக்கும், இந்த அடிப்படை உணர்வு இல்லாத காரணத்தினால் தான் நாட்டில் தேவையான பொருள்களின் முட்டுப் பாடும், பொருள்கள் இருந்தும் கிடைக்காத கொடுநிலையும், கள்ளச் சந்தைகளின் பெருக்கும், வரி நிலையும் அதை ஏமாற்றும் குறை நிலையும் நாட்டில் இடம் பெறக் காண்கின்றாேம் ஒவ்வொரு நிலையிலேயும் நின்று நிலைத்து ஆய்ந்து செயலாற்றத் தொடங்கின் நலமுண்டு என்பதை நாம் இதுவரை வள்ளுவர் காட்டக் கண்ட பேருண்மை எனத் தெளிதல் வேண்டும். ஆம்! இத்தகைய திட்ட மிட்ட செயல் முறையை வற்புறுத்திய வள்ளுவர் நாட்டில் தான்-இன்னும் திட்டங்களைச் செம்மையாகத் தீட்டத் தெரியாமலும், தீட்டிய திட்டங்களை நல்லவகையில் - பயனுள்ள வகையில் - ஒன்றைப் பலவாகப் பெருக்கும் வகையில் வழிகாணத் தெரியாமலும் இருக்கின்றாேம்.

பரந்த பாரத நாட்டின் விரிந்த அடிப்படையில் எண்ணற்ற திட்டங்கள் திட்டப்பெறுகின்றன. இத் திட்டங்கள் பலவற்றைப் பிற பகுதிகளைவிடத் தமிழ் நாடே சிறக்கத் தொழிற்படுத்துகின்றதெனப் பிற நாட்டவர் பலரும் நம் நாட்டுத் தலைவர்களும் நன்கு பாராட்டுகின்றனர். நாம் இந்நூலில் இதுவரை கண்டுள்ளபடி ஒவ்வொரு துறையிலும் தமிழ் நாட்டு அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு ஒல்லும் வகையெல்லாம் உதவி ஆவன செய்வதையும் அறிகின்றாேம். இருப்பினும் நாட்டில் பல்வேறு கூக்குரல்கள் கிளம்பியுள்ளமைக்குக் காரணம் என்ன? மக்கள் வாழ்வுக்குத் தேவையான அன்றாடப் பொருள்களை-உணவு, உடை, உறையுள் இன்ன பிற பொருள்களைப் பெற முடியாது.வாடுவது

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/324&oldid=1382190" இலிருந்து மீள்விக்கப்பட்டது