பக்கம்:தொழில் வளம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

தொழில் வளம்


போதுமென்றிருந்தவர்கள் இன்று ஆளவந்த பிறகு இத்தனைப் பேராலைகளையும் பிற பெருங் தொழில்களையும் செய்ய ஊக்குகின்றார்களே எனச் சிலர் ஐயுறுகின்றனர். இவர்களைக் காலமறியாதவர்கள் எனச் சுருக்கமாகச் சொல்லி விடலாம். கால நிலையையும் உலகச் சூழ்நிலையையும் பிற நாட்டு நிலைமைகளையும் உற்றறியாது, கண்மூடி மெளனியாகவே இருப்பின் தனி மனிதனாயினும் சரி-சமூகமாயினும் சரி-பெரு நாடாயினும் சரி-எங்கேயோ பின்தங்கி நிலையிழந்து வாழ்விழந்து வாடி வதங்கவேண்டியதுதான். இதை உணர்ந்தே வள்ளுவர்,

'ஞாலம் கருதினும் கைகூடும் காலம்கருதி
இடத்தாற் செயின். (49.4) என்றும்,
'எவ்வ துறைவ துலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. (43.6) என்றும்
'எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளா உலகு ‘ (47.10)

என்றும், இன்னும் பலவகையினும் வற்புறுத்துகின்றார். இவ்வாறு காலமும் இடமும் கருதி, உலகம் உறைவதறிந்து, அதனோடு ஒட்ட ஒழுகிச் செயலாற்றல் நாட்டு முன்னேற்றத்திற்கு நல்ல குறி. இனி இவற்றின் மேலாகச் செய்வினையின் மூலமறிந்து செயலாற்றும் நிலையையும் நாம் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் அடிப்படையாகச் செய்வினையின் மூலம் அறிவதே தேவையானது. ஒரு தொழிலைத் தொடங்கு முன்பும், தொடங்கிச் செயலாற்றும் பொழுதும், செயலாற்றித் தொழிற்சாலையில் பொருளைக் குவித்து விற்பனைக்கு அனுப்பும் பொழுதும், பிற சமயங்களிலும் இடைவிடாது அதன் மூல நிலையைஅடிப்படையை-எண்ணி எண்ணியே செயலாற்றக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/323&oldid=1382177" இலிருந்து மீள்விக்கப்பட்டது