பக்கம்:தொழில் வளம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில் வளமும் பொருளாதாரமும்

319


தலைப்புக்கும் மிகப் பொருந்துவதாகும். நாட்டில் பல பணிகள் உரியவரிடம் ஒப்படைக்கப் படாமையால் கேடுறுவதைக் காண்கின்றாேம். பக்ரா நங்கல் போன்ற பேரணைகளெல்லாம் முடிப்பதற்குள் பிளவுறக் காண்கின்றாேம். உரிய மேற்பார்வை இல்லாமையின் 'பூனா' போன்ற பெருநகரங்களெல்லாம் வெள்ளத்தால் வாடி வருந்துவதையும் காண்கின்றாேம். தமிழ் நாட்டிலும் எத்தனையோ மாற்றங்கள் இருப்பதை அறிந்து அமைச்சரும் அறிஞரும் அரசியல் தலைவரும் பிற பெரியோர்களும் உளம் நைவதை அறிகிறோம். 'அதனை அவன் கண் விடாத' காரணமே இத்தகைய கொடுமைகள் நேரக் காரணம் என வள்ளுவர் கூறுவர்.

அப்படியே 'இடம்' ஆராய்வதை வள்ளுவர் திட்டமாக வரையறை செய்கின்றார் கண்ட கண்ட இடங்களில் அரசியல் சூழ்நிலை காரணங்களுக்காகப் பலப்பல செயல்கள்-தொழில்கள் - மேற்கொள்ளப் பெறுகின்றன; ஆனல் அவற்றுள் பல பின்பு பயனற்றனவாக உள்ளமையையும் காண்கின்றாேம். வள்ளுவர் கண்டபடி இடமறிந்து செயலாற்றின் செம்மை நலம் பெற முடியுமன்றாே. இதனினும் ஒரு படி மேலே சென்று,

'கால மறிந்து இடமறிந்து செய்வினையின்
மூல மறிந்து செயல்’

என்கின்றனர் அறிஞர்கள். ஒரு செயல் அல்லது தொழில் தொடங்குமுன் இத்தனையும் ஆராய்தல் தேவையாக உள்ளது. காலநிலையை ஆராயவேண்டும். இன்றும் நம் நாட்டுக்கு இவ்வுண்மை முற்றும் பொருந்துவதாகும். உரிமை பெறு முன் காந்தியின் நெறி பற்றி இராட்டினமும் கதரும் பிற எளியபொருள்களுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/322&oldid=1382169" இலிருந்து மீள்விக்கப்பட்டது