பக்கம்:தொழில் வளம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

தொழில் வளம்


தாலும், பொருளாதார நிபுணர்கள்-திட்டம் தீட்டும் செம்மை நலம் சான்ற அறிஞர்கள்-அவற்றை ஊக்கக் கூடாது என்கின்றார். 'ஊக்கார் அறிவுடையார்' என்பது அவர் வாக்கு. இங்கு அறிவுடையார்’ என்ற தொடர் சிறப்பாகப் பொருளாதார அறிவுடையாரையே குறிக்கும்.

இனி, இத்திட்டங்களைப் பொருளாதார அடிப்படையில் அமைக்கும்போது வேறு சிலவற்றையும் எண்ணிப் பார்க்கவேண்டும். சில நாடுகள் உலகில் மிக வேகமாக முன்னேற்றம் பெறுவதையும் வேறு சில நாடுகள் கோடி கோடியாகச் செலவிட்ட போதிலும் முன்னேற்றம் காணாதிருப்பதையும் இன்று நாம் காண்கின்றாேம். பொருளால் மட்டும் சிறக்கும் நாடுகளைக் காட்டிலும் ஒரு சில துறைகளில் சிறு சிறு நாடுகள்பொருள் வளத்தால் சிறக்காத நாடுகள்-முன்னேற்றம் அடைந்துள்ளதையும் காண்கின்றாேம். இதற்குக் காரணம் என்ன? பொருள் மட்டும் முன்னேற்றத்திற்கும் திட்டங்களுக்கும் போதாது. அது தான் முதல் நிலையில் தேவையான ஒன்றே. ஆனால் அது முறை தகாத வகையிலே முறை தெரியாதாரிடம் ஒப்படைக்கப் பெறின் என்னாகும்? அப்படியே உரிய இடங்களின் தரமும் நிலையும் ஆராயாது, கண்ட கண்ட இடங்களில் நினைத்த தொழிற்சாலைகளைத் தொடங்கினாலும் பயன் காணல் அரிது. வள்ளுவர் இவ்வுண்மைகளையே,

'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்’ (52.7) என்றும்
‘தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது' (50.1) என்றும்,

காட்டுவர். இக் குறட்பாக்கள் வேறு பல வினைகளுக்கு உரியனவாகக் கூறப் பெறினும் ஈண்டு நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/321&oldid=1382161" இலிருந்து மீள்விக்கப்பட்டது