பக்கம்:தொழில் வளம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில் வளமும் பொருளாதாரமும்

317


காட்டுகின்றார், எத்தனையோ கோடி ரூபாய் கடன் வாங்கிச் செயலாற்றினாலும், வரவுக்கு மேல் செலவானால் வாழும் வழி கிடையாதே என முதல் குறட்பா (48:8). வினாலே வள்ளுவர் வருந்திக் கூறுகின்றார். அப்படியே திட்டம் தொடங்கும்போதும் செயலை மேற்கொள்ளும் போதும் அதற்குரிய முதல் இல்லாது தொடங்கின் ஒரு பயனும் இல்லை என்பதை இரண்டாவது (45:9) குறளில் வெளிப்படக் காட்டுகின்றார். முதல் என்ற போது, வள்ளுவர் வெறும் பணம் முதலை மட்டும் குறிக்க வில்லை என்பதை உணரவேண்டும். பொருள் முதலாகப் பல அடிப்படைத் தேவைகளை எண்ணியே வள்ளுவர் 'முதல்' என்கின்றார், அவை என்னென்ன என்பதை,

'பொருள் கருவி காலம் வினை இடனோடைந்தும்
இருள் தீர எண்ணிச் செயல் (68:5)

எனக் காட்டுவர்.

எனவே பொருள். கருவி, காலம், .செயல், அச்செயலாற்றும் இடம் அனைத்தையும் ஆராய்ந்து எண்ணி உணர்ந்தே எந்தவகைத் திட்டத்தினையும் தீட்ட வேண்டுமென்பது வள்ளுவர் கருத்து. இத் திட்டங்களுக்கும் வளம் பெருக்கும் வழிகளுக்கும் பொருள் இன்றியமையாது வேண்டப்படுவதுதான். என்றாலும் அத்துடன் பிறவற்றையும் ஆராய்ந்தே எந்தப்பெருந் தொழிலையும் பெருந்திட்டங்களையும் தொழிற். படுத்தத் தொடங்க வேண்டும். இனி மூன்றாவது குறளால் (47:3) வள்ளுவர் ஒன்றை நினைத்து, ஒன்றைத் தொழிற்படுத்தி முதலையே இழக்கும் அவல நிலையை எண்ணி நைகின்றார். அத்தகைய செயல்களைப் பிறர், அறியாக்காரணத்தாலோ, கட்சிப்பற்று, வட்டப் பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, இன்னபிற வேறு சில காரணங்களாலோ மேற்கொள்ள விரும்பித் துடித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/320&oldid=1382149" இலிருந்து மீள்விக்கப்பட்டது