பக்கம்:தொழில் வளம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

தொழில் வளம்


போதிலும், தனிப்பட்டவர் அமைச்சராக மாறும் நிலையில் இத்தகைய மாற்றங்கள் நடைபெறுவது முறையாகாது. இவற்றை அனைவரும் கூடி ஆராய்ந்து தொழிற்படுத்துமுன் எண்ணிச் செயலாற்றியிருக்க வேண்டும் எனத் தலைவர்களே கூறுகின்றார்கள் என்பதை நன்கு அறிவோம். வள்ளுவர் இக்தகைய செயல் முறையினைப் பொருளாதார அடிப்படையில் அழகுறக் காட்டுகின்றார்,

'ஆகாறு அளவு இட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை’ (48.8) என்றும்,
'முதல் இலார்க்கு ஊதியம் இல்லை, மதலையாம்
சார்பிலார்க் கில்லை நிலை (45.9) என்றும்
'ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினையை
ஊக்கார் அறிவுடை யார் (4.3) என்றும்.

இன்னும் பலவகையிலும் காட்டுகின்றார் வள்ளுவர். இவற்றால் வள்ளுவர் பொருளாதார உண்மையை எவ்வாறு நுணுகி ஆராய்ந்து காட்டியுள்ளார் என்பதை உணரவேண்டும். இந்த அடிப்படையை உணராத பொருளாதார நிபுணர்களைக் குறித்துத் தான் பாரதி அவ்வாறு 'வாழுநாட்டில் பொருள் கெடல் கேட்டிலார்’ எனக் கூறினர் போலும். தாங்களாகவே கண்டு உணரவேண்டிய அவர்கள் அவ்வாறு உணராததோடு மட்டுமின்றி, பிறர் கண்டு உணர்த்தவும் கேட்க வில்லையே என அவர் வருந்துகின்றார். இனியாவது கேட்கின் பயன் உண்டு. கேட்பார்களா ?

மேலே கண்ட மூன்று குறட்பாக்களாலும இவை போன்ற பிறவற்றாலும் வள்ளுவர் பல அதிகாரங்களில் நாடும் பொருளும் எவ்வாறு திட்டமிட்ட அடிப்படையிலே செம்மைப் படுத்தப் பெறவேண்டும் என்பதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/319&oldid=1382136" இலிருந்து மீள்விக்கப்பட்டது