பக்கம்:தொழில் வளம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில் வளமும் பொருளாதாரமும்

315


அத்திட்டங்களை நிறைவேற்றும் முறையாலும் நாடு ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது உண்மைதான். எனினும் நேரு தொடங்கி நாட்டுத் தலைவர் அனைவரும் கூறுவது போன்று, செலவழிக்கும் தொகை அளவில் மிகச் சிறிய பகுதியையே பயனாகக் காண முடிகின்றது. என்பதை எண்ண எந்த இந்தியனும் வருந்ததாதிருக்க முடியாது. சில வேளைகளில் இவ்வெண்ணற்ற குழுக்கள் கூடத் தேவை இல்லை என நினைக்கும் அளவுக்குத் தலைவர்கள் மனங் கசந்து கருத்தினை வெளியிடுகிறார்கள்.

நாட்டைப் பொருளாதார அடிப்படையில் ஆய்ந்து செயலாற்ற வழிகாட்ட வேண்டுவது குழுக்களின் சிறந்த பணியாகும். இவ்வாறு அன்றிப் பிற-தேசப் பற்றின் காரணமாகவோ, வேறுபல வெறியாடல்களின் விளைவாலோ, பிற சூழல்களாலோ-காட்டின் பொருளாதார அடிப்படையினை மறந்து, தொழில் வளம்படுத்து முறை, கல்வி நிலை, பிற அடிப்படைத் தேவைகளின் நிலை இவைகளை ஆராயாது, பல தேவையற்ற செயல்களும் வீண் செலவுகளும் மேற்கொள்ளப் பெறுவதையும், கோடிக் கணக்கில் செலவிட்டுப் பயனில்லையே எனத் தலைவர்கள் உள்ளங்குமைவதையும் காண்கின்றாேம். இந்த அடிப்படை நிலை நன்கு அமைய வள்ளுவர் பல வழிகளைக் காட்டியுள்ளனர்.

பல்வேறு தொழில்களும், பிற துறைகளில் மாற்றங்களும், வேறு ஏற்பாடுகளும் காட்டில் விரைவில் மேற்கொள்ளப் பெறுகின்றன. அண்மையில் மத்திய அரசாங்கத்திலும் தமிழ் நாட்டிலும், கல்வி, பொன், கட்டாய சேமிப்பு போன்ற பல துறைகளில் உண்டான புதுப் புதுச் சட்டங்களையும் மாற்றங்களையும் கண்டோம்: ஒரே கட்சியே ஆட்சியில் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/318&oldid=1382128" இலிருந்து மீள்விக்கப்பட்டது