பக்கம்:தொழில் வளம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

தொழில் வளம்


அவையே நாடெனப்படும் என்றும் அவ்வாறு அன்றிப் பிறரை எதற்கும் கை நோக்கி வாழ்வன, வேறு எத் துணைச்சிறப்பியல்புகள் பெற்றிருப்பினும் நாடெனத் தகுதி அற்றன என்றும் காட்டுகின்றார். ஆம் இந்த அடிப்படையிலேதான் அண்ணல் காந்தி அடிகளால் நம் நாடு எல்லாத் துறைகளிலும் தன்னிறைவு பெற வேண்டுமென வற்புறுத்திக் கொண்டு வந்தார். இந்த நிலை நம் நாட்டுக்கு இன்னும் வரவில்லை என்பது கண் கூடு. நம்மிலும் தாழ்ந்த நிலையில் உள்ள நாடுகளும் பல. எனினும் என்று உலக நாடுகள் ஒவ்வொன்றும் தன்நிறைவு கொண்டனவாக வாழ்கின்றனவோ, அன்றே உலகம் அமைதியுறும்; அதுவரை அல்லல் தான். இந்தத் தன்நிறைவுக்கு அடிப்படை பொருளாதார நிலை என்ற பெயரால் வழங்கப் பெறுகின்றது. இன்று நாட்டில் பல பொருளாதார நிபுணர்கள் ஆய்வதாகக் காட்டிக் கொண்டாலும் காட்டில் பொருளும் பிறவும் கேடுறுவதை அரசாங்க அமைச்சர்கள் தத்தம் சட்டசபைப் பேச்சுக்களிலும் பிறவிடங்களிலும் காட்டுவதை அறிய முடிகின்றது. அடிமை நாட்டில் பாரதியார் பாடிய,

'வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார்
வாழு நாட்டில் பொருள் கெடல் கேட்டிலார்’

என்ற அடிகள் உரிமை பெற்றுப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் மாறவில்லையே. காரணம் என்ன ?

இன்று நாட்டிலே எத்தனையோ திட்டங்கள் தீட்டப் பெறுகின்றன. எத்தனையோ குழுக்கள் (Committees) அமைக்கப் பெறுகின்றன. பல் குழுக்கள் அடிக்கடி பெயர் மாற்றம் பெறுகின்றன. அவற்றின் அமைப்பாலும், தீட்டும் திட்டங்களாலும், அரசாங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/317&oldid=1382122" இலிருந்து மீள்விக்கப்பட்டது