பக்கம்:தொழில் வளம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. தொழில் வளமும் பொருளாதாரமும்



லகமும் நாடும் நாமும் வாழ வழிவகுத்த வள்ளுவனார் தம் குறள் ,நூலில் நாடு எத்தகையதாக இருக்க வேண்டும் என்று காட்டத் தவறவில்லை. இன்று வாழும் எத்தனையோ நாடுகள் உலக அரங்கில் அங்கம் வகிக்கின்றன. நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பல பெயரளவில் நாடுகளாக உள்ளன. வள்ளுவர், நாடு தன்நிறைவு கொண்டதாக, தேவையான எல்லாவற்றையும் தானே பெறக் கூடியதாக, பிற நாட்டார் கை நோக்கி வாழ வேண்டாததாக, வளமெலாம் வாய்க்கப் பெற்றதாக இருக்கவேண்டுமென்று காட்டுவர்.

'நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல
நாட வளந்தரும் நாடு' -(47:9)

என்பது அவர் வாக்கு. இருவகையிலும் நாட்டின் இயல்பு இத்தகையது எனத் திறம்பட இதில் வள்ளுவர் விளக்கியுள்ளமையை எண்ணிப் பார்க்க வேண்டும். பிறர் கையை நாடா வளம் பெற்றன எவையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/316&oldid=1399827" இலிருந்து மீள்விக்கப்பட்டது