பக்கம்:தொழில் வளம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

தொழில் வளம்



பெரும் கனரகத் தொழிற்சாலை அதிபர்களும் பல இயந்திரங்களையும் அவற்றின் உறுப்புக்களையும் உற்பத்தியாக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களும் நீடித்த உழைப்பு, திறன், விலைக்குறைவு, தங்கள் மேற்பார்வை உபயோகிப்பதில் சிக்கனம் முதலியவற்றையே அடிப்படையாகப் பொருள்களை உற்பத்தி செய்தால் அவர் தம் பொருள்களே நாட்டில் பெரும்பான்மை விற்பனையாகும். இவற்றை வாணிபம் செய்வோர் விரும்பிச் செய்து வாங்குவோரிடம் நற்பெயர் எடுப்பர். எனவே அவர்கள் இத்தகைய பொருள்களை மேலும் மேலும் மக்களுக்கு அறிமுகப்படுத்துவர். எனவே நாட்டின் தொழில் வளம் பெருக்கும் நல்லவர்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தத்தம் உற்பத்திச் சாலைகளிலும் தொழிற்சாலைகளிலும் பொருள்களை உண்டாக்கி உலகுக்கு அளிப்பின் நாட்டு மக்களும் வாணிபத் துறையாளரும் அவர்கட்கு என்றென்றும் கடமைப்பட்டு அவர்கள் தொழில் பெருகத் துணையாக நிற்பர். தமிழ்நாடு இவ்வாறான நல்லவகையில் இணைந்து முன்னேறுவதாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/315&oldid=1381997" இலிருந்து மீள்விக்கப்பட்டது