பக்கம்:தொழில் வளம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில் வளமும் பொருளாதாரமும்

323


றனர். 'பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது' என்ற ப்ழமொழிபோக, புள்ளிக்கணக்குப் புவிக்கு உதவாது என்ற புதுமொழியல்லவா இன்று தோன்றியுள்ளது. நல்ல வேளையாக அமைச்சர்கள் ஒரளவு இக்குறையை நீக்கும் வகையில் ஊர்தோறும் ஒடி உழன்றுமக்கள் குறைகேட்டு, அவர்தம் வாட்டம் தீர்க்கும் வ்கையில் செயலாற்ற முனைகின்றனர்-திட்டம் தீட்ட வழிகாட்டுகின்றனர். அவர்கள் காட்டிய வழியில் தொழிற்படுவோர் திறம்படச் செயலாற்றின் நலம் உண்டாகும். 'கேட்டிலார்' என்ற சொல்மாறி, 'கேட்கிறார்’ என்ற நிலை பெறுவதோடு கேட்டுச் செயலாற்றுகின்றார் என்ற பெரு நிலை காட்டில் முகிழ்த்து வளர வேண்டும். ஆம்; இத்துறையில் சிறந்த பொருளாதார நிபுணர்கள் கருத்திருத்த வேண்டும். ஊர்தோறும் உழல வேண்டும். உட்கார்ந்தது போதும்; நாடெங்கும் வாழ நாம் நாடெங்கும் சுற்றுவோம்’ என்று சென்று சென்று-நோய் கண்டுகண்டு. குறைகண்டு 'நோய் நாடி நோய் முதல் நாடி அது, தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்' வேண்டும். செய்வார்களா ?

இன்று பரந்த பாரத நாட்டைப் பற்றிய பொருளாதார அடிப்படையில் ஒருசில நூல்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டிலோ தமிழிலோ அத்தகைய ஆய்வு நூல்கள் ஒன்றும் வெளிவரவில்லை. கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கெனச் சில பொருளாதார நூல்கள் அண்மையில் வெளிவந்தன. என்றாலும் அவை வெறும் மொழிபெயர்ப்பு நூல்களாக உள்ளமையின் அவற்றால் நாட்டுக்குப் பெரும் பயன் விளையும் என எதிர்பார்க்க முடியாது; மாணவரும் அதை எதிர் பார்க்காது. ஆங்கில மூலங்களையே கற்கத் தொடங்கி விட்டனர். தமிழ் நாட்டுப் பொருளினை நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/326&oldid=1382209" இலிருந்து மீள்விக்கப்பட்டது