பக்கம்:தொழில் வளம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

தொழில் வளம்


ஆராய்ந்து, அதன் அடிப்படையில் வளரும் விவசாயம், வாணிபம், தொழில்வளம் இவற்றை உணர்ந்து நன்கு தெளிவுபட எழுதும் நல்லாசிரியர்களும் அவர்தம் நூல்களைக் கண்டு உணர்ந்து நாட்டுப் பொருள் நிலையை நன்கு உயர்த்தப் பாடுபடும் தொண்டர்களும் இனித் தான் பிறக்க வேண்டுமோ என எண்ணத்தக்க வகையில் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் பற்றிய ஆய்வு அமைந்துள்ளது. எனினும் வருங்காலத்தில் வாழ்வின் அடிப்படையாகிய பொருளாதார உணர்வு நாட்டில் கற்றவரிடம் மட்டுமின்றி மற்றவர்களிடமும் சிறக்க வாய்ப்பு உண்டு என்ற நிறைவில் மேலே சொல்லலாம்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் சிறக்க எத்தனையோ வாய்ப்பும் வழிகளும் உள்ளன. வள்ளுவர் பலவற்றை நாட்டின் செல்வம் என்று சொல்லுகின்றார். 'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்’ என்றும், 'கேடில் விழுச் செல்வம் கல்வி' என்றும், 'அருட் செல்வம் செல்வத்துச் செல்வ'மென்றும் 'பணிதல் செல்வ'மென்றும், 'வேண்டாமை அன்னவிழுச் செல்வ'மென்றும் இன்னும் பலவகையிலும் வள்ளுவர் 'செல்வம்'ப்ற்றிக் குறிப்பிடுகிறார், 'பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை' என்று பொருட்செல்வத்தையும் அவர் குறிப்பிடத்தவறவில்லை. வள்ளுவர் இவ்ற்றலெல்லாம் வெவ்வேறு வகைப் பட்ட செல்வங்களைக் குறித்தாரேனும், அனைத்தையும் ஆராயின் இவை அனைத்தும் மக்கள் மாறுபாடற்று, நிறைவுற்று, வஞ்சனையற்று, பகையற்று, சூதற்றுப் பண்பட்ட நல்வாழ்வினிலே சிறக்க வாழச் சாதனங்களாகவே முடிவதோடு, இவை ஒன்றையொன்று பற்றிப் படரும் தன்மையனவாக உள்ளன என்பதும் நன்கு புலப்படும். இந்த அடிப்பன்டையில் மக்கள் வாழ்வுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/327&oldid=1382218" இலிருந்து மீள்விக்கப்பட்டது