பக்கம்:தொழில் வளம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில் வளமும் பொருளாதாரமும்

325



இயைந்த செல்வம் அனைத்தும் பொருளாதார வாழ்வின் அடிப்படைத் செல்வங்களே.

இருபதாம் நூற்றாண்டு நாகரிக உலகத்துக்கு இவையெல்லாம் புரியாதனவாக இருக்கலாம். எனினும் இச்செல்வம் அனைத்தும் என்று நாட்டில் உலகில் - நிறைவுறுகின்றதோ அன்றே நாடும் உலகும் நாமும் உயிர்களும் நலம் பெற்று வாழ்வோம் என்ற அளவோடு இந்த எண்ண அலைகளை நிறுத்தி மேலே செல்வோம்.

இன்று உலகில் உள்ள பல்வேறு நாடுகள் பல்வேறு துறைகளால் தத்தம் நாட்டுப் பொருளாதார நிலையைப் பெருக்கிக் கொள்ளுகின்றன. வெறும் பயிர்த் தொழிலாலேயே நாட்டுச் செல்வ வளத்தைப் பெருக்கிக் கொண்ட நாடுகள் பல இன்று அவையும் பிறவகைகளில் பொருள் பெருக்க வழி வகைகளை நாடுகின்றன. இன்றும் உழவுத் தொழிலாலும் பிற விளைபொருள்களாலும் நாட்டு வளத்தையும் பொருளாதார அமைப்பையும் பெருக்கிக் கொள்ளும் நாடுகள் இல்லாமல் இல்லை. நாட்டு இயற்கை வளம், சூழல், பிற பருவ நிலைகள் இவற்றின் காரணமாகச் சில நாடுகள் உழவு முதலியவற்றாலும் பிற உயிர்ப்பொருள், தாவரம் முதலியவற்றாலும் சிறக்க விளங்குவதை அறிகிறோம். ஆஸ்திரேலியாவின் இயற்கை வளமே அந்நாட்டுப் பொருளாதார வளமாக அமைகின்றது, காயும் கனியும் பிற உணவுப் பொருள்களும் பெருகி விளையும் அந் நாட்டிலே, கால் நடைகளெனும் ஆடும் சிறந்த பொருளாதார சாதனமாக அமைவதை அறிகிறோம். அப்படியே மலேயா நாட்டின் வானோங்கிய 'இரப்பர்' மரங்கள் தம் கண்ணீர் வடித்த பாலால் நாட்டைச் செல்வ வளமுள்ள. நாடாக மாற்றுகின்றன. இப்படியே இன்னும் உலகில் சில நாடுகள் இயற்கை விளை பொருள்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/328&oldid=1381932" இலிருந்து மீள்விக்கப்பட்டது