பக்கம்:தொழில் வளம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

தொழில் வளம்



தொழில் துறையில் மேலாளர், பணியாளர்தம் (Foremen, Charge-hand etc) பயிற்சியும், நன்கு போற்றப்படும் வகை, வளரும் தொழில் துறைக்கு அவசியம் எனவும் வற்புறுத்தினர்.

இவ்வாறு நாட்டுக்கல்வியும் தொழிலமைப்பும் பொருந்திய வகையில் வளரவேண்டுமென மேலை நாட்டு அறிஞர்கள் எடுத்துக் காட்டிய நிலையை நாட்டில் அன்று ஏனோ தொழிற்படுத்தாது விட்டுவிட்டனர். ஒரு வேளை உடனே தோன்றிய போரும் பிற சூழல்களும் காரணமாக அமையலாம். எனினும் தற்போது இந்த அடிப்படையின்றேனும், பல்வேறு சூழல்களையும் பிறவற்றையும் கருத்துட்கொண்டு கல்வியும் தொழிலும் கலந்தும் தனி நிலையிலும் வளர்ச்சி பெற்று வருவது ஆறுதல் அளிக்கின்றது. அதிலும் தமிழ்நாட்டு அரசாங்கத்தவர் வெறும் ஏட்டுக் கல்வியோடு பொருந்திக் கலந்திருந்த தொழில்நுட்பக் கல்வித்துறையைத் தனியாகப் பிரித்து, அதற்கு அத்துறையில் வல்லவரைத் தொழிற்படு தலைவராக அமைத்து இன்று தொழிற் கல்வியை வளர்த்து வருவது போற்றக் கூடிய ஒரு செயலாகும்.

தொழில் துறை வளர்ச்சியில் பல காலமாகப் பல்வேறு முயற்சிகள் பொருளாதார அடிப்படையில் மேற்கொள்ளப் பெறுகின்றன. இந்த அடிப்படையில் இந்தியத் தொழில் நுட்ப ஆய்வுக்குழு (Industrial Research Bureau) 1935-ல் தொடங்கப்பெற்றது. இது பரந்த பாரத நாட்டுத் தொழில் வளர்ச்சிக்கு உரிய ஆக்க வேலைகள் பலவற்றையும் மேற்கொண்டு தொழில் படுகின்றதென்று அறிஞர்கள் காட்டுவர். அறிவியல் தொழிலியல் ஆய்வுக் களமென்றும் (The Board of Scientific & Industrial Research) அண்மையில் தொடங்கப் பெற்றுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/335&oldid=1381962" இலிருந்து மீள்விக்கப்பட்டது