பக்கம்:தொழில் வளம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில் வளமும் பொருளாதாரமும்

333



உரிமை பெற்ற இந்திய அரசாங்கம் இத்துறையில் எத்தனையோ புதுப்புது வகையான ஆய்வுக் குழுக்களையும் வளர்ச்சி நெறிகாணும் பேரவைகளையும், பிறவற்றையும் அமைத்துத் தொழிற்படுத்தி, தொழில் வளத்தையும் அதன்வழி நாட்டின் பொருளாதாரத்தையும் நன்கு வளர்த்து வருகின்றது. இவற்றுள் சில அமைப்புகளையும் அவற்றின் தொழில் முறைகளையும் இதுவரை இந்நூலின் முந்திய பகுதிகளில் ஆங்காங்கே கண்டு வந்துள்ளோம்.

இவற்றுள் ஒன்றே இந்திய அரசாங்கம் அமைத்துள்ள திட்டக் கமிஷன். ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்ட அடிப்படையில் நாட்டின் பொருளாதாரம், மூலப் பொருள், மக்களின் ஆக்கத்திறன், பிறதேவைப் பொருள்கள், தனியார், அரசாங்க மூலதனம், வெளி நாட்டார் பொருளாதாரம், பிறநாட்டுத் தொழிலியற் சாதனங்கள் இவற்றைக் கருத்துள் அமைத்து மாநிலந்தோறும் பலப்பல தொழில் நிலையங்களையும் பிற ஆக்கப் பணிகளையும் வரையறுக்க இக்கமிஷன் ஆவன காண்கின்றது எனினும் அண்மையில் நேரு அவர்களே காட்டியபடி அது தன் அளவில் வளர்ந்து அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் நிலையில் செல்லுகிறது என்பது எண்ணத்தக்கது. பாராளுமன்றத்திலும் அதன் செயல் பற்றியும், அதன் வழிச் செல்லும் ஆக்க நெறி பற்றியும், அவற்றுள் சில நாட்டு நலத்தில் பற்றிலா வகையில் தொழிற்படுவது பற்றியும் எதிர்க் கட்சியினர் மட்டுமின்றி, அரசாங்கச் சார்பாளர்களே பேசுவதைக் காண்கின்றோம். பல கோடி இந்நாட்டில் ஐந்தாண்டுத் திட்ட அடிப்படையில் செலவழிக்கப்படுவதறிகின்றோம். உள்நாட்டில் மட்டுமின்றி வேறுபல வெளிநாடுகளி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/336&oldid=1381951" இலிருந்து மீள்விக்கப்பட்டது