பக்கம்:தொழில் வளம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

தொழில் வளம்



லிருந்தும் அளவற்ற மூலதனமும் பொருள்களும் வந்து வந்து குவியும் இக்காலத்தில் ஆராய்ந்து, அளந்து, உணர்ந்து, உற்றறிந்து தொழிலைப் பொருளாதார வளம்பெறும் அடிப்படையில் அமைக்கவில்லையானால் என்றென்றும் நாம் தலை நிமிரவே முடியாது. ஆட்சியாளர்களும் தொழில் அமைப்புக்களும், பெரு மின்சார நிலையம், அணைகள், உருக்காலைகள், பிறபெருந்தொழில்கள் அனைத்தையும் உரிய காலத்தில் தொடங்கத்தக்க வகையில் உடனுக்குடன் தொழிற்பட வேண்டும், அரசாங்கக் காலதாமதத்தாலும் பிற குறைகளாலும் வர வர; வெளிநாட்டு மக்களும் ஏன்?-உள் நாட்டுச் செல்வர்களும் கூடத் தத்தம் பொருளை நாட்டுத் தொழில் பெருக்கத்தில் செலவிட அஞ்சுகின்றனர்-பின்னடைகின்றனர். இந்த நிலையில் அரசாங்கம் தேவைக்கு மேலாகப் புதுப் புதுக் குழுக்களையும் (Committees) பிற அமைப்புக்களையும் அமைத்து வளரும் தொழிலை நிறுத்துமோ என அஞ்சத்தக்க வகையில் செயலாற்றுகின்றனர். மேலும் அரசாங்க வரிக் கொள்கை, கட்டுப்பாட்டுக் கொள்கை, தொழிலாளர் நலன் பற்றிய சட்டதிட்டங்கள் ஆகியவற்றில் அடிக்கடி மாற்றங்கள் உண்டாவதும் பல்வேறு திட்டங்களுக்கு இடையூறுகளாக அமைகின்றன. உரிமை பெற்றபின் இந்திய நாட்டுப் பொருளாதார வளர்ச்சியும் அதன் அடிப்படையில் இரும்பு, உருக்காலை. மின்சாரம். பருத்தி, நீர்ப்பாசனம் முதலியனவற்றில் வளர்ச்சியும் உண்டென்றாலும், நாம் இதுவரை செலவு செய்த பல கோடி ரூபாய்களுக்கு ஈடானவருமானம் இல்லை எனவே அரசாங்கமும், தொழில் துறை வல்லுநரும், பிற பொருளாதார அறிஞர்களும் இனி எண்ணித் துணிக கருமம் என்ற நிலையில் எண்ணி எண்ணியே செயலாற்ற வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/337&oldid=1381957" இலிருந்து மீள்விக்கப்பட்டது