பக்கம்:தொழில் வளம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில் வளமும் பொருளாதாரமும்

335



'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு'

என்று வள்ளுவர் காட்டியபடி, எண்ணாது தொழிலை மேற்கொண்டு பிறகு எண்ணிப் பார்ப்போம் என்ற நினைப்பால் 'வந்தபின் காப்பவராகாது', 'வரு முன் காப்பவராக' இருந்து எச் செயலையும் எண்ணியே தொடங்க வேண்டும். தொழில் துறையில் பல குறைபாடுகளுக்கிடையே, நாட்டுப் பொருளாதாரம் வளரத்தக்க வகையில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது உண்மைதான். இன்னும் இடையிடையே பல காரணங்களால் வந்து புகும் இடர்ப்பாடுகள் இல்லாது அமையின், செலவிடும் தொகைக்கும் ஊக்கத்துக்கும் மக்கள் உணர்வுக்கும் ஏற்ற வகையில் எவ்வளவோ முன்னேற்றங்களைப் பெற முடியும். பொருளாதாரமும் தொழில் வளமும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்தனவாகும். தொழில் எனும்போது உழவுத் தொழில் உட்பட அனைத்தையும் சேர்த்தே இங்கு நான் குறிக்கின்றேன். தமிழ்நாட்டில் உழவுத் தொழிலில் 61.5ஐ வீதமும் மற்றவற்றுள் 38.5 வீதமும் மக்கள் பணியாற்றுகின்றனர். எனவே இங்கு இரண்டும் இணைந்தே செல்ல வேண்டியுள்ளன.

இன்று காணும் சில குறைபாடுகளுக்கு யாரையும் குறைகூற முடியாது. சுதந்திரம் பெற்றபின் பதினைந்தாண்டுகளில் பட்ட அனுபவம் பெரிது. அவ்வனுபவங்களுக்குப் பலவற்றைப் பலியிடவேண்டும். அந்தப் பலியாகத்தான் இக்குறைபாடுகள் அமைந்தன. இன்றைய குறைபாடுகளுக்குத் தனியாக யாரையும் குறை சொல்லமுடியாது. மாட்டுமக்கள் அனைவருக்கும் தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரப் பெருக்கத்திலும் உணர்வும் ஊக்கமும் உள்ளன. 'நாடு வளர்ந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/338&oldid=1381909" இலிருந்து மீள்விக்கப்பட்டது