பக்கம்:தொழில் வளம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

தொழில் வளம்



hyph வீடு வளரும்' என்பதும் 'வீடு வளர்ந்தால் நாடு வளரும்' என்பதும் பின்னிப் பிணைந்த மொழிகள். எனவே தமிழ் நாட்டில் - பரந்த பாரதத்தில் - பிறந்த ஒவ்வொருவரும் நாட்டு வளம் தழைக்க ஒல்லும் வகையில் பாடுபட வேண்டும். வீணே மற்றவரைக் குறை கூறிக் கொண்டு மட்டும் இருந்தால் போதாது; அது மனிதப் பண்பாடு மாகாது-சிறப்பாகத் தமிழ்ப் பண்பாடு அது வன்று அனைவரையும் ஒருங்கழைத்தும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உணர்வோடு, தோளோடு தோள் சேர்த்து, உணர்வோடு உணர்வமைத்து, எல்லா வகையிலும், நல்ல முன்னேற்றம் காண முயல வேண்டும். எந்த வேறுபாடும் இன்றி, நான் தமிழன் - இந்தியன்-அவற்றிற்கு மேலாகப் பண்பட்ட மனிதன் என்ற உணர்வோடு அனைவரும் செயலாற்றின் வையகம் புன்னகைப் பூஞ்சோலையாகும். பாரத நாட்டுப் பண்பும் வளரும்; சீரும் செழிப்பும் ஓங்கும். தமிழ்நாடு தழைத்துத் தரணிக்கு வழிகாட்டியாக அமையும். அதற்குரிய ஆக்கப் பணி பெரிது-அரிது-சிறந்தது-செம்மை வாய்ந்தது. அந்த நல்ல பணியாற்றி நாடெலாம் வாழவைக்க, 'சேர வாரும் செகத்தீரே' என்று அனைவரையும் அழைத்து அமைகின்றேன்.

வாழ்க தமிழ்நாடு! வளர்க அதன் தொழில் வளம்!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/339&oldid=1381910" இலிருந்து மீள்விக்கப்பட்டது