பக்கம்:தொழில் வளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தொழில் வளம்


கிப் பாபநாசம் அணை வரை நம் நாட்டில் வளர வித்திட்ட நாளாகும்.

உழவு நாளிலிருந்து மனிதன் மெள்ள மெள்ள வளரத் தொடங்கினான்; எனவே அவன் தேவையும் வளரலாயிற்று; ஆகவே, தொழில்களும் நாட்டிலும் வீட்டிலும் நகரிலும் உலகிலும் வளரத் தொடங்கின. ஊர்களும் : நகரங்களும் வளரவளர அவற்றிற்குத் தேவையான பல்வேறு பொருள்களைச் செய்யும் தொழிற் சாலைகள் வளர்ச்சி அடைந்தன என்பது சொல்லாமலே அமையும். மற்றும் உணவையும் பிற பொருள்களையும் ஓரூரிலிருந்து மற்றோர் ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை உண்டாயிற்று. தனி வழியாகக் கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்க நடந்துசென்ற மனிதன் ஊர்களுக்கிடையில் சாலைகள் அமைக்கக் கற்றுக்கொண்டான். அவை வெறும் மண் சாலைகள் தாம் என்றாலும் அவை அவனது தொழிலை நன்கு வளர்த்தன எனலாம். அச் சாலைகள் மூலம் செல்ல அவன் தன் நடையைத் தவிர சிறுசிறு வண்டிகளையும் பயன்படுத்தத் தொடங்கிய காலமே போக்குவரத்துத் தொடங்கிய காலம். அக்காலமே இன்று நாம் காணும் எல்லாப் போக்குவரத்துக்கும் வித்திட்ட பொற்காலமாகும். அக்காலத்தில் அவன் எந்த வகையான வண்டியைச் செய்தான் என நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. எந்தெந்த விலங்குகள் அவனுக்குப் பாண்டில் இழுக்கப் பயன்பட்டன என்பதும் சொல்லமுடியாத ஒன்று. மாடுகளும் குதிரைகளும்-ஏன்? - நாய்களும் பிற விலங்குகளும் கூட இன்று வண்டிகள் இழுக்கப் பயன்படுகின்றன. இந்த நிலையில் அக்காலத்திலும் அவனுக்குப் பயன்பட்ட பல விலங்குகள் வண்டிகளை ஈர்த்திருக்கும். விசாகப்பட்டினக் கப்பற் கட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/35&oldid=1381392" இலிருந்து மீள்விக்கப்பட்டது