பக்கம்:தொழில் வளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வின் தேவை

31


அடிப்படையிலே. கணக்கிடப் பெறுவன என்பதை யாரும் மறக்க முடியாதல்லவா! எனவே எத்துணைத் தொழில் வளம் பெறினும் - பிற பொருள்களைக் கொண்டு குவித்தாலும் உணவு இல்லையேல் அந்நாடு உயராது. எனவே தொழில் வளத்திற்கு முன்னர் உணர்ந்து போற்றப்பட வேண்டியது உழவேயாகும். இந்த உண்மையை இன்னும் நம் நாட்டில் நாம் உணராத காரணத்தினாலேயே பல எதிர்பாராத இடர்ப்பாடுகள் உண்டாகின்றன.

உழவு மனிதனுக்குப் பல தொழில்களைச் செய்யக் கற்றுக் கொடுத்தது. உழவு தனி மனிதனால் ஆகக் கூடிய ஒன்றன்று. அவ்வுழவுக்கு வேண்டிய பல்வேறு கருவிகளைச் செய்துகொடுக்க எத்தனை எத்தனை, உதவியாளர் தேவை. வயலைச் செம்மைப்படுத்தவும் வாய்க்கால் வெட்டவும் நீர் கட்டவும் எருவிடவும் விதை தெளித்துக் களை எடுத்து அறுவடை செய்யவும் எத்தனை எத்தனை கருவிகள் அவனுக்குத் தேவை. அத்தேவைகள் வளர வளர நாட்டில் தொழில் வளர்ச்சியும் பெருகியிருக்க வேண்டுமல்லவா.! மற்றும் அதற்கு உதவிய அத்தனைத் தொழிலாளிகளையும் அணைத்தே அந்த உழவு மனிதன் கூட்டுச் சமுதாயம் அமைத்துப் பண்பாட்டுடன் வாழக் கற்றுக்கொண்டான். மற்றும் அக்காலமே அவன் ஊரைவிட்டு ஊர் செல்லும் நாடோடியாக இல்லாமல் ஓரிடத்தில் நிலைத்து உறையும் நாட்டையும் ஆக்கிக்கொண்ட காலமாகும். வரலாற்று ஆசிரியர்கள். அந்த நாகரிக காலத்தையே ஆற்றங்கரை நாகரிக காலமெனவும் அந்த நாகரிகமே பிற நாகரிகங்களுக்கெல்லாம் தாய் நாகரிகமெனவும் காட்டுவர். தம் உழவுக்கு நீரைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்ட அந்த நாளே, பக்ராநங்கல் அணை தொடங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/34&oldid=1381388" இலிருந்து மீள்விக்கப்பட்டது