பக்கம்:தொழில் வளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தொழில் வளம்


மறுக்க வல்லார்? அந்த அடிப்படைதானே இன்று நாட்டை உடைவகையில் - பலப்பல வண்ண ஆடைகளில் பலப்பல நூலும் பட்டும் மயிருமற்ற செயற்கைப் பொருள்களால் ஆகிய ஆடைகளில் வாழவைக்கின்றது.

கூட்டுச் சமுதாயமாக வாழ்ந்த மனிதன், வேறுபடவும் கற்றுக் கொண்டானல்லவா! அதனால்தானே மிகப்பழங்காலத்திலேயே, மாறாட்டங்களும் போராட்டங்களும், பிற கொடுமைகளும் அவற்றின் வழி நாட்டுப் பிரிவுகளும் உண்டாயின. எனவே மனிதன் பிரிந்து போரிடக் கற்றுக் கொண்ட காலத்திலும் ஒருவரிடமிருந்து மற்றவரும் ஒரூராரிடமிருந்து மற்றோரூராரும் ஒரு நாட்டாரிடமிருந்து மற்றொரு நாட்டாரும் தத்தம்மைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவை உண்டாயிற்று. முன்னமே வனவிலங்குகளிடமிருந்தும் பிற கொடுமைகளிடமிருந்தும் தன்னையும் தன் பயிர் முதலியவற்றையும் பாதுகாத்துக் கொள்ள ஓரளவு பழகிய மனிதன் இந்த மனிதப் போராட்டத்துக்கும் தன்னைத் தயார் செய்து கொண்டான். அந்த விளைவில் அவன் அமைத்த கோட்டைகள் பல; செய்த பாதுகாப்புக் கருவிகள் பல, மாற்றாரை அழைக்கச் செய்த கருவிகள் பல. அவை யாவும் பின் அவன் தேவைப் பொருளாகவே மாறிவிட்டன இன்று நாட்டுக் காவலுக்கு வருவாயில் பாதிக்குமேல் செலவிடும் நாகரிகத் தேவையைப் பார்க்கிறோமல்லவா! எனவே அன்றையப் போருக்கும் பாதுகாவலுக்கும் வேண்டிய பொருள்களைச் செய்து கொள்ள ஏற்படுத்திய தொழிற்சாலைகள் பல. இந்தப் போராட்டம் என்று தோன்றிற்று என்று சொல்ல முடியாது. ஆதாமும் ஏவாளும் தோன்றிய அன்றே சாத்தானும் தோன்றிற்று என்று விவிலிய நூல் கூறுவது போன்று சேர்ந்து வாழக் கற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/37&oldid=1381399" இலிருந்து மீள்விக்கப்பட்டது