பக்கம்:தொழில் வளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வின் தேவை

35


கொண்ட அன்றே அவன் உள்ளம் பிரிந்து வாழவும் திட்டமிட்டிருக்கலாம். அந்தத் திட்டமே பின் பெரும் போர்க்களமாகியிருக்கும். எப்படியாயினும் அப்போராட்டங்களும் மனிதனுடைய தேவையை ஓரளவு நிறைவு செய்தன எனலாம். கடந்த இரண்டு உலகப் போர் காரணமாக உண்டான எத்தனையோ பொருள்கள் இந்த அமைதிக் காலத்திலும் மக்களுக்குப் பயன் படுவதைக் காண்கிறோம். ‘ஜீப்’ (Jeep)) என்னும் சாதனம் போருக்காக அன்று உண்டாக்கப் பெற்றாலும் இன்று அமைதியான சமுதாய வாழ்வுக்கும் அது எத்தனையோ வகையில் பயன்படுகிறது. போருக்காகவே கண்டுபிடிக்கப் பெற்ற அணுவின் ஆற்றலால் சமுதாயத்தை என்னென்ன வகையில் வாழவைக்கத் திட்டமிடுகிறார்கள்! இப்படியே பண்டைக் காலத்துப் போர்களும் வளர்ந்து வந்த மக்கட் சமுதாயத்திற்கு எண்ணற்ற தொழில் வளங்களைத் தேடித் தந்திருக்குமல்லவா!

இதுவரையில் நாம் கண்ட தேவைகளும் அவற்றின் வழி வளர்த்த தொழில் வளர்ச்சிகளும் மனித சமுதாயத்தின் தெளிவான வரலாற்றுக் காலத்து முற்பட்டனவேயாகும். அவனது வரலாற்று எல்லையில் அவனது பெருகிய தேவைகளும் அதனால் அவன் உண்டாக்கிய தொழிற்சாலைகளும் அளவிறந்தன். இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளாக—எகிப்தயசுமேரியா— சிந்துவெளி-காவிரி நாட்டு நாகரிகங்கள் தோன்றிய அந்த நாளிலிருந்து அவன் தேவை நாள்தொறும் பெருகிக் கொண்டே வருகின்றது. அதற்கென அத்தேவையை நிறைவு செய்யச் சாதனங்களும் தொழிற் கூடங்களும் பிற் அமைப்புகளும் வளர்ந்து கொண்டே வருகின்றன். எகிப்தின் உயர்ந்த ‘பிரமிட்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/38&oldid=1381403" இலிருந்து மீள்விக்கப்பட்டது