பக்கம்:தொழில் வளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தொழில் வளம்


கோபுரங்களும், சிந்துவெளியின் மொகன்சோதாரோ ஹாரப்பா போன்ற நாகரிகங்களும், தமிழ் நாட்டுப் பழம்பெருநகரங்களைக் காட்டும் சங்க இலக்கியங்களும் அவ்வக்காலத்திய மனிதத் தேவைகளையும் அவற்றை நிறைவு செய்யப் பயன்படுத்திய பொருள்களையும் அவற்றை உண்டாக்க அமைந்த தொழிற்சாலைகளையும். நமக்கு நாள்தோறும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன அல்லவா!

இமயமுதல் குமரிவரையிலும் அலெக்சாண்டிரியா ரோம் முதல் பாடலிபுரம் (பாட்னா) வரையிலும் மக்கள் இரண்டாயிர மாண்டுகளுக்கு முன்பே தாராளமாகப் பழகிவந்தார்கள் என அறிகிறோம். ‘குமரியோடு வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட’ வரலாற்றை இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பே கண்டிருக்கிறோம். அப்படியே கிரேக்க நாட்டிலிருந்து மௌரியப் பேரரசின் காலத்தில் பஞ்சாப் வரையில் அலெச்சாந்தர் வந்ததையும் அதற்குமுன்பே கண்டிருக்கிறோம். அதே காலத்தில் தமிழ் நாட்டு மேற்குக் கடற்கரையில் கிரேக்க நாட்டுக் கப்பல்களும் கீழைக் கடற்கரையில் சீன நாட்டுக் கப்பல்களும்– பாய்மரக்கப்பல்கள்தாம்–தங்கி வாணிபம் செய்தன எனவும் வரலாற்று வழியாலும் மொழி நூலாராய்ச்சியாலும் காண்கின்றோம். எனவே அந்தக் காலங்களில் பல நாடுகள் தம்முள் பழகி இருந்தன என உணர்கின்றோம். எனவே பலநாட்டு நாகரிகங்களும் பண்பாடும் பழக்க வழக்கங்களும் பிறவும் கலந்து நின்றமை போன்றே வேறு பலநாட்டுப் பொருள்களும் இடமாற்றமும் பெற்றிருக்க வேண்டும். வேற்று நாட்டுப் பொருள்களைக் கண்ட ஒவ்வொரு நாட்டு மக்களும் அவ்வப் பொருள்களின் தேவையும் பயனும் உணர்ந்து அவைகளைத் தத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/39&oldid=1381405" இலிருந்து மீள்விக்கப்பட்டது