பக்கம்:தொழில் வளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வின் தேவை

37


நாடுகளில் செய்யப் பெருமுயற்சி செய்திருப்பார்களன்றோ! அதனாலேதான் நாடுதோறும் பல்வேறு தொழில்கள் பெருகலாயின. இன்று பிறநாட்டுத் தொழில் வல்லுநர்தம் முயற்சியினாலும் உறுதுணையாலும் நம்நாட்டில் பல்வேறு தொழில்களை வளர்ப்பது போன்றே அக்காலத்திலும் ஒரு நாட்டு மக்களில் தொழில் வல்லார் பிறநாடுகளுக்குச் சென்று அவ்வத் தொழில் வளரத்தக்க வகையில் ஆக்கமும் ஊக்கமும் தந்து உலகெங்கணும் நல்ல முறையில் தொழில் வளரப் பாடுபட்டிருப்பார்கள் எனத் தெரிகின்றதன்றோ!

உலக நாடுகளை யெல்லாம் இங்கே நாம் எடுத்து ஆராய்தலென்பது இயலாத ஒன்று. பரந்த பாரத நாட்டைப் பற்றி எண்ணவும் நமக்குக் காலமும் இடமும் போதா. தமிழ் நாட்டுப் பண்டைத் தொழில் வளத்தைத் தனியாகக் காணல் சாலும். எனவே இங்கே பொதுவாக இந்திய நாட்டு வரலாற்று எல்லையில் காலந்தோறும் உண்டான. மாறுதல்களையும் அவற்றின் வழி அமைந்த தேவைகளையும் அதனால் வளர்ந்த தொழில் துறைகளையும் பொதுவாகக் கண்டு அமைலாம் என எண்ணுகின்றேன். அலெக்சாண்டர் படையெடுப்புக்காலம் தொடங்கி 1947-ம் ஆண்டுவரையில் இந்தியாவை நாடி வந்த வேற்று நாட்டவர் எண்ணற்றவர். அலெக்சாண்டருக்கு முன்னரும் பலர் நம்நாடு நோக்கி வந்துள்ளனர். அவருள் முதலாவதாக வந்த வரை ஆரியர் என்கின்றனர் வரலாற்றாளர். எப்படியாயினும் ஆரியர் காலந் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையில் நாடு பல மாற்றங்களைப் பெற்றுள்ளது. வந்தவர் தம் வாழ்வுக்கும் நாகரிகப் பழக்கவழக்கங்களுக்கும் ஏற்ப எத்தனையோ புதுப்புதுப் பொருள்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/40&oldid=1381410" இலிருந்து மீள்விக்கப்பட்டது