பக்கம்:தொழில் வளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தொழில் வளம்


கொண்டுவந்தனர். அவற்றையெல்லாம் இங்கேயே செய்து வளம் பெருகும் வகையில் பல்வேறு தொழிற் சாலைகள் அன்று தொட்டு இன்றுவரை வளர்ந்துள்ளன. ஆரிய திராவிட வேறுபாடும் இந்து முஸ்லீம் வேறுபாடும் பிற வேறுபாடுகளும் ஒன்றிக் கலந்து விட்டான். என்று கூறுமாறு பல்வேறு தன்மையாளர் தம் வாழ்வின் தேவைகள் நாட்டின் ஒன்றிய தேவைகளாக மாறி, அந்த அடிப்படையிலேயே அவற்றை வளர்க்கும் தொழிற்கூடங்களும் அமைந்துள்ளன. உயர்ந்த பெருந்தொழில்கள் தொடங்கிச் சாதாரண குடிசைத் தொழில்வரை எந்த வேறுபாடும் இல்லா வகையில் எல்லாச் சமூகத்தாரும் ஒன்றிக் கலந்து செயலாற்றும் வகையிலேயே தொழில் நிலையங்கள் பெருகியுள்ளன. எனவே. எல்லாக் கலப்புகளும் நாட்டின் தொழில் வளத்தைப் பெருக்கின என்பது பொருந்தும்.

மனிதன் வளர வளரத் தன் தேவைகளைப் பெருக்கிக்கொண்டே போகிறான். இன்று தொலைபேசியும் உந்துவண்டியும் பிற சாதனங்களும் நடுத்தர மனிதனுடைய இன்றியமையாத தேவைகளாக உள்ளன எனப் பேசப்படுகின்றது. உணவும் உடையும் உறையுளும் அடிப்படைத் தேவைகள் என்ற நிலைமாறி உலகில் எத்தனையோ மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாக அமைந்து வருகின்றன. உலக அரங்கில் இன்று வானவூர்தி வாழ்வின் அடிப்படைத் தேவையாகிவிட்டது. வானவெளியில் தோன்றும் பல பொருள்கள் சில ஆண்டுகளில் மனிதனின் இன்றியமையாப் பொருள்களாகலாம். எனவே மனிதன் அறிவு வளர வளரப் பல தேவைகள் பல்கிப் பெருகுகின்றன. புகைவண்டியும் உந்துவண்டியும் வானவூர்தியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/41&oldid=1381412" இலிருந்து மீள்விக்கப்பட்டது