பக்கம்:தொழில் வளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வின் தேவை

39


தொலைபேசியும் பிறவும் மனித வாழ்வின் தேவைப் பொருளாக அமைந்த காரணத்தால் அவைகளைப் பெருக்கும் சாதனங்களாகிய தொழிற்சாலைகள் வளர வேண்டிய தேவையும் கூடவே உண்டாகின்றது. அப்படியே மனிதனுடைய இயற்கை உணவுடனேயே செயற்கை உணவுகளைக் கொள்ளத் தொடங்கிய காரணத்தாலே. பல உணவுத் தொழிற்சாலைகள் உருவாகின்றன. அப்படியே கண்ணைப் பறிக்கும் வண்ண ஆடைகளைப் பட்டிலும், பருத்தியிலும் கம்பளியிலுமன்றி வேறு வகையிலும் மேற்கொள்ள விரும்பிய காரணத்தாலேயே பல்வேறு பொருள்களிலிருந்து பல வகை ஆடைகளை உண்டாக்கும் பல தொழிற்சாலைகள் நாடெங்கும் உண்டாகின்றன. இப்படியே ஒவ்வொரு துறையையும் எண்ணிக்கொண்டே போனால் அவ்வரலாற்றின் தொழில் வளர்ச்சிபற்றிய பல்வேறு குறிப்புக்கள் நமக்குக் கிடைக்கும். கடந்த பெரும் போருக்குப் பின் உண்டான பலவாய்ப்புகள் மனிதனுடைய வாழ்வின் தேவையை மிக அதிகமாக வளர்த்துவிட்டன. நாம் முன்னே கண்ட தாயுமானவர் பாடலில் காட்டிய ஆசையினும் மிக அதிகமாக மனிதன் தன் ஆசையை வளர்த்துக்கொண்டே போகிறான். அந்த ஆசைகள் அனைத்தும் அவனைப் புதுப்புதுத் தொழில் வளர்ச்சியில் ஊக்கம் பெறச் செய்கின்றன. எனவே நம் நாட்டிலும் உலகிலும் நேற்று வரை கேள்விப்படாத பல்வேறு பொருள்களை உண்டாக்கும் தொழிற்சாலைகள் வளர்ந்து கொண்டே வருவதைக் காண்கிறோம். அத்தொழிற் சாலைகள் அனைத்தும் மனித சமுதாய நல்வாழ்வுக்காக அமைபவேண்டுமென்பதே நம் ஆசை.

மனிதனுடைய தேவை வளர வளரத் தொழில் வளம் பெருகுவது நல்லதேயாகும்; அதனால் மனித-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/42&oldid=1381418" இலிருந்து மீள்விக்கப்பட்டது