பக்கம்:தொழில் வளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தொழில் வளம்


னுடைய வாழ்க்கைத்தரமும் சமுதாய வளர்ச்சியும் சிறப்பதும் உண்மைதான்! ஆனால் அத்தேவைகள் தனி நலமும் சுயநலமும் கலந்ததாக மாறும்போதுதான் நாம் அஞ்சவேண்டியுள்ளது. போர்கள் உலகில் பல புதுமைகளை உண்டாக்கிப் பலப்பல புதுத் தொழில்களை உண்டாக்கினபோதிலும் அவற்றை நினைத்தாலே மனித உள்ளம் அஞ்சத்தானே செய்கிறது. எனவே அமைதியை நாடும் மனித உள்ளத்துக்கு அவதியை அளிக்கும் போர் துன்பத்தைத் தருவதில் வியப்பில்லை அல்லவா! உலகெங்கணும் பலவிடங்களில் அணு பற்றிய ஆராய்ச்சிகளும் அணுஉலைக்கூட ஆக்கவேலைகளும் நடைபெறுவதனை அறிகிறோம். அவை அனைத்தும் மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் உதவியாக அமையுமானால் எல்லோரும் மகிழ்வார்களன்றோ ! ஆனால் அவற்றை ஆக்கத் துறைக்குப் பயன்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, சிலர் மகிழும் அதே வேளையில் அவ்வத்துறையில் வல்லார். சிலர் உலகை அழிக்க அவற்றைப் பயன்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றார்களே என எண்ணும்போது நடுக்கமே உண்டாகின்றது. கடந்த காலப் போர்கள் பல தீமைகளுக்கிடையில் சில நன்மைகளைச் செய்தன என்பது உண்மையாயினும், இனி வரும் போர்கள் யாரை வாழ விட்டுவைக்கும் என அறியா வகையில் மனிதன் மட்டுமன்றி ஓரறிவுடைய புல் பூண்டு வரை அடியோடு அழிக்கும் ஆற்றல் வாய்ந்தவையாக இருக்குமாதலால் அவற்றால் முழுக் கேடே அன்றிப் பயன் விளையப் போவதில்லை. இந்த உண்மைகளை நம்மைக் காட்டிலும் அவற்றுடன் விளையாடும் விற்பனர் நன்கு அறிவர்; அறிந்தும் இப்படி அவர்கள் சோதனைக்குமேல் சோதனை செய்வது மனித சமுதாயத்துக்கு வேதனை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/43&oldid=1381424" இலிருந்து மீள்விக்கப்பட்டது