பக்கம்:தொழில் வளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு முன்னாளில் தொழில் வளம்

53



கப்பல்களாகிய கலங்கள் திசை அறிய அமைத்த விளக்கின் சிறப்பை இளங்கோவடிகள்,

‘இல்ங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்'

(சிலப். 6-141)

எனக் குறிப்பிடுவர். பிறநாட்டு வணிகராகிய யவன்ர் தம் குறிகாட்ட விளக்கமைத்தனர் என்பதை'

‘யவனர் ஓதிம விளக்கு '

(பெரும்:317)


எனக் காட்டுவர். இந்த நிலையே இன்று விளக்கொளி காட்டும் விளக்கு தம்பம் (Light House) என்ற பெயரில் வழங்குகின்றது. இவ்வாறு கடல்மேற் சென்ற கலங்களில் பல பண்டங்கள் வந்தன என்ற உண்மையை

‘வாலிதை எடுத்த வளிதரு வங்கம் ,
பல்வேறு பண்டம் இழிதரு பட்டினம்'

(மதுரை: 536-7)

என மாங்குடி மருதனார் காட்டுகின்றார். ஆம்! இக்காலத்தைப் போன்று. பலவகையில் இலங்கும் பெருங்கப்பல்கள் இன்றேனும், காற்றல் செலுத்தப்பெற்ற பெருங்கப்பல்கள்.வங்கங்கள்-நாட்டில் பெரு வாணிபம் கடைபெற அடிப்படைக் காரணங்களாக இருந்தன. பல வங்கங்கள் உலவிய காரணத்தால்தானே இதைத் தமிழர், தம் 'வங்கக் கடல்' என அழைத்தார்கள் என்று எண்ணவேண்டிய முள்ளது.

அவ்வாறு பல கப்பல்கள் பல்வேறு பொருள்களை ஏற்றியும் இறக்கியும் நின்ற் சிறப்பினை உருத்திரங் கண்ணனார்,

‘நீரினின்று நிலத்தேறவும்
நிலத்தினின்றி நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி’

(பட்டின.129-33)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/56&oldid=1381437" இலிருந்து மீள்விக்கப்பட்டது