பக்கம்:தொழில் வளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தொழில் வளம்



என்பர் உருத்திரங்கண்ணனார். மதுரை நகரப்புற மதில்களில் வைக்கப்பட்ட பல்வேறு இயந்திர சாதனங்களைச் சிலப்பதிகாரமும் பிற இலக்கியங்களும் காட்டும்போது அந்த எல்லையில் நாம் இன்றும் இல்லை என எண்ணி வியக்கவேண்டியுள்ளதன்றாே பிறரை அழிக்கும் கருவிகளை வளர்க்கும் அந்த அளவில் நம்மைக் காத்துக்கொள்ளும் கருவிகளைச் செய்துகொள்ள நாம் முன்னேறவில்லையல்லவா! எத்தனையோ உலோகத் தொழிற்சாலைகள் போர்க் கருவிகள் தற்காப்புக் கருவிகள் போன்ற நாட்டுத் தேவைகளையும், இரும்பாலும் செம்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் இயற்றியபல வீட்டுக்குரிய சாமான்களையும் செய்த-தொழிற். பேட்டைகளும் தொழிற் பட்டறைகளும் நாட்டில் ப்ல பாகங்களிலும் சிறந்து விளங்கின என்பது தேற்றம்.

இனி இத்தகைய தொழில்வளம் சிறந்த நாட்டில், வாணிப வளம் சிறந்தோங்கியிருக்கும் என்பது.சொல்லாமலே அமையுமல்லவா! கடைச்சங்க காலமாகிய, இன்றைக்கு ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன் கீழைக் கடற்கரையில் 'புகார்' என்னும் காவிரிப், பூம்பட்டினமும் மேலைக் கடற்கரையில் 'வஞ்சி’ என்னும், இன்றைய கொச்சியும் துறைமுகங்களாக விளங்கின. இந்த இரு கடற்கரைத் தலைககர்களிலும் பல்வேறு காட்டவர் வந்து தங்கி, கொண்டும் கொடுத்தும் வாணிப. வளனைப் பெருக்கினர்கள் எனக் காண்கின்றாேம். இரண்டும் இன்று நிலைகெட்டன. புகார் அழிந்து, சிற்றுாராகி விட்டது. வஞ்சி நிலை மாறி இன்று:வேறு. வகையில் வளர்கின்றது. பாண்டியங்ாட்டுக் கொற்கை. முத்து வாணிபத்தைச் சிறக்க கடத்திய கொற்கை: சிற்றுாராகக் கிடக்கின்றது. பதிலாகத் தூத்துக்குடி வளர்வது ஆறுதல் தருகின்றது. கடற்கரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/55&oldid=1381421" இலிருந்து மீள்விக்கப்பட்டது