பக்கம்:தொழில் வளம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு, முன்னாளில்-தொழில் வளம்

51



அருங்காவலுடையது; மலைபோல் உயர்ந்தது; பல கொடிகளாகிய உச்சியை உடையது; அதன் சுண்ணாம் பிட்ட சுதைநிறம்,வெள்ளியையும் தோற்றாேடச் செய்தது; பல வயிரங்கள் நிறைந்து, செம்பினாற் செய்த நல்ல சுவருடின் பல கைவண்ணச் சித்திரங்களுடன் கூடிய உள்ளோடு(கர்ப்பக் கிரகம்).நின்ற நல்இல் அது என அவர் நமக்கு விளக்கும்போது அக்காலத்திய உயர்ந்த கட்டடக் கலையும் அதைப் போற்றி வளர்த்த தொழில் திறமும் நம்மை வியப்புக்குள் ளாழ்த்திவிட, வில்லையா !

இத்தகைய மக்களுக்கு இன்றியமையாத உடை, உணவு, உறையுள் என்ற முன்றையும் திறம்பட் ஆக்கியும் செப்பனிட்டும் தரும் தொழில், வளத்தோடு பிற எல்லாத் தொழில்களும் தமிழ் நாட்டில் சிறந்திருந்தன என்பதைப் புறநானூறு போன்ற பல இலக்கி யங்கள் மக்கு எடுத்துக் காட்டுகின்றன. போர்க் களத்துக்கு வேண்டிய பல்வேறு படைக்கலங்களைக் கலவை உலோகமாகிய எஃகினால் செய்து அந்த ஆய் தத்தை எஃகம் என்றே அழைத்த பெருமை தமிழருக்கு உண்டு. எனவே தமிழ் நாட்டில் எத்தனையோ விடங்களில் உருக்காலைகள் இருந்திருக்க வேண்டும் என்பது வெள்ளிடைமலை யன்றாே ! போர்க்களத்தில் பயன்படுத்துவதற்கும், மாற்றரிடத்திலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்கும், நகரங்களை எதிரிகளிடமிருந்து மீட்பதற்கும் செய்யப்பெற்ற பல ஆயுதங்களும் பல இயந்திரங்களும் பிறவும் பழங்கால இலக் கியங்களில் பலவிடங்கள்ல் சிறக்கப் பேசப்பெறு கின்றன.

வாயிலொடு புழை அமைத்து
ஞாயில்தொறு-புதை நீரீஇ (பட்டினப்: 287-8).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/54&oldid=1381402" இலிருந்து மீள்விக்கப்பட்டது