பக்கம்:தொழில் வளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தொழில் வளம்



காணலாம். இரும்புக் கொல்லரும், மரம்கொல் தச்சரும் பிற கம்மியரும் சிறக்க வாழ்ந்தார்கள் என்பதை,

'கருங்கைக் கொல்லன் இரும்பு விசைத்தெடுத்த கூடம்'
(பெரும்: 437)

இருந்த காஞ்சியென்று, காஞ்சிபுரத்தை உருத்திரங்கண்ணனார் காட்டுவர்.

'கோடுபோழ் கடைநரும் திருமணி குயினரும்
சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை காண்பரும் கலிங்கம் பகர்நரும்
செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயும் மக்களும்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி' (மதுரை: 511-18).

மதுரைப் பெருநகரில் அத்தலைநகரின் தொழில் வளத்தைப் பெருக்கினார்கள் என்று மாங்குடி மருதனார் பாராட்டுகின்றார்.

இத்தகைய வெள்ளியும் பொன்னும் மணியும் மர்மும் கொண்டு அமைத்த கோயிலில் பல்வேறு தொழில்வளம் மிக்கிருந்த சிறப்பை நக்கீரர்,

'ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்
வரைகண் டன்ன தோன்றல, வரைசேர்பு
வில்கிடந் தன்ன கொடிய, பல்வயின்
வெள்ளி யன்ன விளங்கு சுதை யுரீஇ
மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல் பூ வொரு கொடி வளைஇ

கருவொடு பெயரிய காண்பின் நல்இல்'
(நெடுநல் :107-114)

என்று - விளக்கிப் பாண்டிமாதேவியார் தங்கிய அப் பெருமாடத்தையே நம் கண்முன் கொண்டுவந்து வைக்கின்றார். ஆடவர் எளிமையில் குறுக முடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/53&oldid=1382374" இலிருந்து மீள்விக்கப்பட்டது