பக்கம்:தொழில் வளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு-முன்னாளில் தொழில் வளம்

49



'கோட்டாற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்'
( , 163)

என்ற முடத்தாமக் கண்ணியார் சொற்களும்,

'வண்முகப் பாண்டில்' (சிறுபாண் : 260)
'தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த

ஊரா நற்றேர் உருட்டிய புதல்வர்'
(பெரும்பாண்: 248-9)


‘நாவாய் சூழ்ந்த நளிநீர் படப்பை' ( " 328)
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றிச்
சுடுமண் ஓங்கல் நெடுநகர் வரைப்பு' ( " 403-4)
'பொலந் தாமரைப் பூச்சூட்டியும்' (மதுரை: 103)

என்ற பிற புலவர்தம் வாய்மொழிகளும் நமக்கு நன்கு விளக்குகின்றன வன்றோ! நகரமைப்புபற்றி இன்று நாம் பேசுகின்றோம். அன்றைய நகர் அமைப்பைப் பற்றிய அடி நம்மைத் திகைக்க வைக்கின்றது. தாமரை மலரை ஒத்த நகர அமைப்பினை மேற்கொண்டு திறம்படத் தொழில் இயற்றி அக்கால நகரங்களை அமைத்த பெருமை தமிழருக்கு உண்டன்றோ!

இத்தகைய நகர அமைப்புக்கும் பிற பணிகளுக்கும் இன்றைய நிலை போன்றே அன்றும் இரும்பு முக்கிய இடம் பெற்றது. ஆயினும் இன்று நாம் பெறும் சிமிட்டி அன்று இல்லை. அதற்குப் பதிலாக உயர்ந்த நிலையில் சுதை அல்லது சுண்ணாம்பு பயன்பட்டதை நன்கு அறிகிறோம். சுண்ணாம்பு, இரும்பு, மரம் இவற்றைக் கொண்டு வானோங்கிய மாளிகைகளைக் கட்டிய தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் எங்கணும் பழங்காலத்தில் சிறந்திருந்தனர். அவர் தம் பரம்பரையினரே இடைக்காலத்தில் வானோங்கிய கோபுரங்களோடு கூடிய, பிற நாட்டார் கண்டு கண்டு வியக்கும் பெருங்கோயில்களைக் கட்டியவர்கள். அந்த நிலையைப் பிறகு

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/52&oldid=1382418" இலிருந்து மீள்விக்கப்பட்டது