பக்கம்:தொழில் வளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தொழில் வளம்



'பெறலருங் கலத்தில் பெட்டாங்கு உண்கென' (பொருந : 156)

'இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து

விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி'
(சிறு : 243 - 4)


மீன் பூத்தன்ன வான்கலம் பரப்பி' (பெரும் : 477)

என்று பெறுதற்கரியதும், சூரிய ஒளியும் பின்னடையும் பொன்னாலாகியதும், மீன்கள் பூத்தன போன்று ஒளிவிடுவதுமாகிய கலம் என்றும் புலவர்கள் பாராட்டியுள்ளார்கள். உண்ணும் கலமும் உடுக்கும் உடையுமே இந்த வகையில் அழகுற அமைந்திருந்தன வென்றால் பிற தொழில்கள் சிறந்திருந்தன என்று சொல்லவும் வேண்டுமோ!

பொன்னாலும் மணிகளாலும் பலப்பல வகையான அணிகள் செய்யும் தொழில் அக்காலத்தில் சிறந்திருந்தது. தாமரை-பொன்மலர் நாற்றமுடைத்து என்பது போன்று-ஒளியுடன் கூடி விளங்கும் வகையில் கைவண்ணத்திறன் காட்டிய தொழிலாளர் அக்காலத்திருந்தனர். யானையின் தந்தங்களைக் கொண்டு பல்வேறு வேலைப்பாடமைந்த தேர் செய்த தச்சர் அக்காலத் திருந்தனர். ஒளிபொருந்திய பல முக அமைப்போடு கூடிய வண்டிகளும் கப்பலும் படகும் செய்தவரும், தேர் செய்தவரும், சுடுமண்ணால் பெருநகரையே சமைத்தவரும் தமிழ் நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து வந்தனர். இவற்றை யெல்லாம்,

'எரியகைந்தன்ன ஏடில் தாமரை' (பொரு : 159)

'நூலின் வலவா நுணங்கரில் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி அணிய' (,,161-62)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/51&oldid=1382363" இலிருந்து மீள்விக்கப்பட்டது