பக்கம்:தொழில் வளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு-முன்னாளில் தொழில் வளம்

47


சான்றுகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், அன்று விண்தோய் புகை போக்கிகள் இருந்ததாகவும் இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆங்கில அரசின் காலத்தில் ‘டக்கா மஸ்லின்’ போன்ற மெல்லிய நல்லிழைத் துணிகளின் தொழில் வளம் நசித்த வரலாற்றை அறிந்த நமக்கு, பல்வேறு படையெடுப்புக்கு உட்பட்ட தமிழகத்தில் அத்தகைய தொழில் இடைக்காலத்தில் நசித்தமைக்குக் காரணம் விளக்கத் தேவையே யில்லையன்றோ!

மற்றும் ஆடையின் பெயர்கள் அமைந்த நிலை கொண்டே அத்தொழில் வளத்தை நன்கு அறியலாம். நீண்ட பாவிலிருந்து. அறுப்பதை ‘அறுவை’ என்றும் துண்டிப்பதைத் ‘துண்டு’ என்றும் துணிப்பதைத் ‘துணி’ என்றும் வெட்டுவதை ‘வேட்டி’ என்றும் காரணத்தோடு பெயரிட்டு வழங்கிய இத்தொழில் பழங்காலத் தொழில் என்பதோடு மட்டுமன்றி, இன்றும் வெளிநாடுகளுடன் வாணிபம் செய்யத்தக்க வகையில் நல்ல வண்ண ஆடைகளைப் பெருக்கும். தொழிலாக அமைந்திருப்பதை அறிகின்றோம்.

ஆடைக்கு அடுத்துப் பல உண்கலப் பொருள்களையும் வேறு பல வீட்டுப் பொருள்களையும் அன்றைய இலக்கியங்களில் காணும்போது நாம் வியக்க வேண்டியுள்ளது. இன்று அரசாங்கப் பொருள் உதவியும் தொழில் நுட்ப உதவியாளர் பக்கத்துணையும் இருந்தும் எத்தனையோ தொழில்கள் வளராது நசிவதைக் காணும் நமக்கு, நம் முன்னோர் அழகுற வளர்த்த கலை நலத்தோடு கூடிய உலோகத் தொழில்களை எண்ணி வியக்கத் தோன்றுகின்றது, மக்கள் உண்ணும் கலன்கள் பொன்னாலும் பிற உலோகங்களாலம் அழகுற அமைந்திருந்த சிறப்பை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/50&oldid=1381986" இலிருந்து மீள்விக்கப்பட்டது