பக்கம்:தொழில் வளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தொழில் வளம்



யாக்கியும் தாம் அணிந்ததோடு செல்வர்கள் தம்மைப் பாடவந்த புலவர்களுக்கும் அத்தகைய உயர்ந்த பட்டாடைகளையே பரிசாக வழங்கினார்கள் எனக் காண்கின்றோம். இக்காட்சி தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் காட்டப் பெறுகின்றது. நாம் ஒன்றிரண்டு கண்டால் போதும் என எண்ணுகின்றேன்.

பத்துப்பாட்டில் வருகின்ற ஆற்றுப் படைத் தலைவர் ஒவ்வொருவரும் தம்மைப்பாடி - வந்த பரிசிலருக்கு இத்தகைய பட்டாடை நல்கினர் என்ற சிறப்பை,

'கொட்டைக் கரைய பட்டுடை நல்கி' (பொருக : 155)

எனக் கரிகாலனைப் பாடிய முடத்தாமக் கண்ணியாரும்,

'காம்பு சொலித்தன்ன அறுவை நல்கி'
(சிறுபாண் : 236)

என நல்லியக் கோடனைப் பாடிய நத்தத்தனாரும்.

'ஆவி யன்ன அவர்நூற் கலங்கம்' (பெரும்பாண்: 469)

என இளந்திரையனைப் பாடிய உருத்திரங்கண்ணனாரும் பாராட்டியுள்ளனர். இவற்றால் பட்டாடைகள் நல்ல வண்ணக் கரைகளோடு விளங்கியிருந்தன எனவும், ஒளி வீசும் நிறத்தனவாக அழகாக விளங்கின எனவும், பாலாவியைப்போன்று மென்மையுடையனவாக இருந்தன எனவும், காண்கின்றோம். இன்று பல ஆலைகள் இத்தகைய தனிவகை (ரகங்கள்) ஆடைகள் நெய்வதாக விளம்பரம் சாற்றுவதை நாம் காண்கிறோமல்லமோ! எனவே ஆடை நெய்தற்றொழில் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பே உயர்ந்திருந்ததென அறிகின்றோம். அவைகளை எத்தகைய பேராலைகளில் நெய்தார்கள்; எப்படி செய்தார்கள்?' என்பன போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/49&oldid=1382346" இலிருந்து மீள்விக்கப்பட்டது