பக்கம்:தொழில் வளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு-முன்னாளில் தொழில் வளம்

45



யிரமாண்டுகளுக்கு முன்பும் தமிழ் நாட்டில் இருந்த நிலையேயாகும். அவ்வக் காலத்தில் வாழ்ந்த புலவர்களும் வரலாற்றாளர்களும் - இந்த உண்மையைக் கூறாது சென்றதில்லை.

இன்று உடை தயாரிக்கும் கைத்தறித் தொழிலும் நூலும் உடையும் தயாரிக்கும் ஆலைத்தொழிலும் பொதுவாக இந்தியாவிலும் சிறப்பாகத் தமிழ்நாட்டி லும் சிறந்து போற்றப்படுகின்றன. இந்தியாவின் கைத்தறித் தொழிலில் பெரும் பகுதி தமிழ்நாட்டிலேயே நடைபெறுகிறது. அப்படியே மதுரையும் கோவையும் ஆலைகளைப் பெருக்கி வளர்க்கின்றன. இந்த ஆடை நெய்யும் தொழில் தமிழ்நாட்டில் பழங்காலத்தில்-வரலாறு வரையறுக்கப் படாத காலத்தில்-நிலைத்திருந்தது. பெரு நகரங்களிலும் சிறு சிறு ஊர்களிலும் ஆடை நெய்வோர் தெருக்களே தனித்தனியாக இருந்தமை காண்கின்றோம். அவர்கள் வெறும் பருத்தியால் மட்டுமன்றிப் பட்டினும் கம்பளமாகிய மயிரினும் கூட ஆடை நெய்தார்கள் எனக் காண்கின்றோம்.

'பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கை'
(சிலப் 5 : 15 - 16)

நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து

நறுமடி செறித்த அறுவை விதியும்
(சிலப் - 14 : 205- 7)

எனப் புகார் நகரச் சிறப்பையும் மதுரைப் பெருநகர் இருந்த சிறப்பையும் சிலப்பதிகாரம் பாராட்டுகின்றது. அந்தப் பட்டினைப் பல்வேறு வண்ணங்கள் தோய்த்தும் சரிகையிட்டும் மென்மை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/48&oldid=1382333" இலிருந்து மீள்விக்கப்பட்டது