பக்கம்:தொழில் வளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தொழில் வளம்


தமிழ்நாட்டு இலக்கியக் கூற்றை நில ஆராய்ச்சியாளர்களும் வரலாற்றாளர்களும் மெய் எனவே தங்கள் ஆராய்ச்சியால் விளக்கிக் காட்டுகின்றனர். எனவே காலத்தால் முந்திய தமிழ்நாடு பல வகையில் சிறந்திருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை யல்லவா!

தமிழ்நாடு பண்பாடு, இலக்கியம், கலை முதலியவற்றில் சிறந்திருந்தது என்பதை இன்று உலக முழுதும் அறிந்து போற்றுகின்றது. அப்படியே தமிழ் நாட்டில் பழங்காலத்தில் பல்வேறு கைத்தொழில்களும் சிறந்திருந்தன என்பதையே நாம் இங்கே காணல் வேண்டும். எத்தனையோ கலைகளில் சிறந்திருந்த தமிழ் நாடு தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்திருந்ததில் வியப்பில்லையல்லவா! கிழக்கே சீன நாடு தொடங்கி, சுமத்திரா ஜாவா முதலிய தீவுகளிலிருந்தும் மேற்கே மத்தியதரைக் கடல் நாடுகள் தொடங்கி எகிப்து, சிறிய ஆசியா, துருக்கி முதலிய நாடுகளிருந்தும் மக்கள் வந்து தமிழ்நாட்டு இருபுறக் கடற் கரைகளிலும் கொண்டும் கொடுத்தும் தத்தம் வாணிய வளனைப் பெருக்கிக் கொண்டார்கள் என்றும், அவ்வாறு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் நிலைத்துத் தங்கிய தெருக்கள் மதுரையிலும் புகாரிலும் வஞ்சியிலும், இருந்தன என்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் நமக்குச் சான்று பகர்கின்றன.

‘முத்து குளிப்பதொரு தென் கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்து
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து

நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே’

என்று விடுதலைக் கவிஞர் இந்த நூற்றாண்டில் இப்பாட்டைப் பாடினார் என்றாலும் இந்த நிலை இரண்டா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/47&oldid=1381436" இலிருந்து மீள்விக்கப்பட்டது