பக்கம்:தொழில் வளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

3. தமிழ் நாடு - முன்னாளில் தொழில் வளம்




தமிழ்நாடு காலத்தால் முந்தியது. உலகில் சில பாகங்களே தொன்மை வாய்ந்தவை என்று நிலநூல் ஆராய்ச்சியாளர் அறுதியிடுவர். அவற்றுள் ஒன்று தமிழகம். விந்திய மலைக்கு வடக்கே பெருங்கடல் இமயத்தைத் தன்னுள் ஆழ்த்தி வைத்திருந்த அந்தப் பழங்காலத்திலே தமிழகம் தெற்கில் விரிந்த நிலப் பரப்பை உடையதாகிக் குமரிமலை, குமரி ஆறு, பஃறுளியாறு போன்றவற்றைக் கொண்டு சிறந்திருந்தது. ஒரு காலத்தில் குமரி மலையும், ஆறும் பிறவும் அழிய அதே காலத்தில் தோன்றிய இமயத்தையும் கங்கையையும் தமவாகக் கொண்டு பாண்டியர் ஆண்டார்களென்று சிலப்பதிகாரம் செப்புகின்றது.[1] இந்தத்


  1. பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
    குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கை இமயமும் கொண்டு
    தென் திசை ஆண்ட தென்னவன்

    (சிலம் 11: வரி. 24:27)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/46&oldid=1381432" இலிருந்து மீள்விக்கப்பட்டது