பக்கம்:தொழில் வளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு முன்னாளில் தொழில் வளம்

55



வளர்த்த 'புகார்' நகரைக் கடல் கொண்டது. இன்றைய உரிமை அரசாங்கத்தார் அகழ்ந்தெடுத்து அந்த நகர் சிறந்த துறைமுகமாக விளங்கிய சிறப்பினை வெளிக்காட்ட முனைந்திருப்பது போற்றற்குரிய ஒன்றாகும்.

இனி இத்தகைய வாணிபத்தை வெறும் புற ஆரவாரத்தோடு மீட்டுமன்றி உள்ளப்பண்போடும் நடத்தி வந்தார்கள் எனக் காண்கின்றாேம் இன்றைய வாணிகத்துறையில் உள்ள குறைபாடுகளைக் காணவும் கண்டு ஒறுக்கவும் அரசாங்கத்தார் எத்தனையோ முறை தளைக் கையாளுகின்றார்களன்றாே! ஆகவே வாணிபம் வளர்ந்தால்மட்டும் போதாது; அது பண்பட்ட நல்ல முறையிலும் நடைபெற வேண்டும் என்ற உண்மையை அன்றே தமிழ் மக்கள் உணர்ந்திருந்தார்கள். இதையே உருத்திரங்கண்ணனார்.

‘கொள்வது உம் மிகை கொள்ளாது கொடுப்பது உம்குறை படாது (பட்டினப்; 210–11)

என்ற ஒன்றைக் காட்டி உணர வைத்துள்ளார். திருவள்ளுவரும், !

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி பிறவும் தமபோற் செயின் (குறள்:12) என்ற அடிகளிலே எல்லா நேர்மைத் திறங்களையும் அடக்கிவிட்டார். எனவே வாணிபம் பெருத்த அளவில் மட்டுமன்றித் திருத்தமான செம்மை -முறையிலும் நடைபெற்றுவந்த பழங்காலத்தை எண்ணி, மகிழ வேண்டாமா! ஆம்! மகிழ்ந்தார் பலர். எனவே பல் நாட்டு மக்கள் இக்காட்டுக்கு வந்து இங்கேயே தங்கிப் பல்வேறு வாணிபங்தளைச் செய்து சிறந்தார்கள் எனக் காண்கின்றாேம். இந்த உண்மையினையும் அதே புலவர், உருத்திரங்கண்ணனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/58&oldid=1381472" இலிருந்து மீள்விக்கப்பட்டது