பக்கம்:தொழில் வளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தொழில் வளம்



'மொழிபல பெருகிய பழிதீர்
தேயத்து புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம் ‘ (பட்டின216-18)


எனக் காட்டுவர். இவற்றல் பல மொழி பேசிய பல நாட்டு மக்கள் தத்தம் நாட்டுக்குப் பழி உண்டாகத வழியில் நேரிய முறையில் வாணிபம்செய்யத் தத்தம் நாடுகளைவிட்டு இங்கே வந்து தங்கியிருந்தார்கள் என அறிகின்றாேம். இன்றைய வணிகரில் பலர் தத்தம் தேய்த்தைப் பழிதீர் தேயமாக்க வில்லையே எனப்பல நாட்டு அரசாங்கங்கள் வருந்துவதைக் காண்கிறோம் தமிழ்நாட்டிலும் அண்டை நாட்டிலும் சில் ஆண்டுகளுக்குமுன் அத்தகைய பழி உண்டாகிச் சில பொருள்களில் வெளிநாட்டுவாணிபம் குறைவுற்றமை இன்னும் நெஞ்சிலிருந்து நீங்கவில்லை யல்லவா!


இவ்வாறு பழங்காலத்தில் தமிழ் நாட்டில், பல் வேறு தொழில்களும், அத்தொழில்கள் பற்றிய வாணிப வளனும், அவற்றிற் கேற்பப் பொருளாதார நலனும் பெருகியிருந்தன என்பதைக் காண்கின்றாேம். இவற்றையெல்லாம் விளக்கும் இலக்கியங்கள். பல. எனினும் விரிவஞ்சி பத்துப்பாட்டு ‘ என்று ஒரு தொகையையே ஈண்டு நான் எடுத்துக்கொண்டேன். பிற தொகை நூல்களும் சிலம்பு மேகலை போன்ற காவியங்களும் அக்கால வாணிப வளனையும் தொழில் செழிப்பையும் காட்டிக் காட்டிப் போற்றுவதை அவ்வவற்றுள் புகுந்து தமிழ் மக்கள் அறியக் கடமைப்பட்ட வர்கள் என்பதை ஈண்டு நினைப்பூட்டுவது தவறில்லை என எண்ணுகிறேன். சிலப்பதிகாரத் தலைவனை பெரு வாணிகன். அவனை முன்நிறுத்திக் காப்பியம் எழுதிய இளங்கோவடிகளும் அவரடி யொற்றி மேகலையை யாத்த சாத்தனாரும் அக்காலத்தில் முடியுடை மூவேந்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/59&oldid=1399301" இலிருந்து மீள்விக்கப்பட்டது