பக்கம்:தொழில் வளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு முன்னாளில் தொழில் வளம்

57



தம் தமிழ்நாட்டையும் அவர்தம் தலை நகரங்களையும் அவற்றுள் கொழித்த தொழில்வளனையும் அதன்வழி விரிந்து சிறந்தோங்கிய நல்ல வாணிப வளனையும் பல வகையில் விளக்குவதை இரு காப்பியங்களையும் பயின்றவர் நன்கறிவர். மற்றவரும் கற்று அறிந்து போற்றி அத்தொழில் வளத்தையும் வாணிபத்தையும் இன்றும் என்றும் வளர்க்க ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அக்காலத்தை விட்டு இடைக் காலத்தில் தமிழ்நாட்டின் சிறந்த தொழில் வளத்தையும் வாணிபச் சிறப்பையும் காண நினைக்கின்றேன்.

கடைச் சங்க காலத்திற்குப் பிறகு தமிழ் நாட்டில் ஓர் இருண்ட காலத்தைக் காண்கின்றாேம். அக்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்தவர் பலர். அவருடன் பல சமயங்களும் நாகரிகப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களும் குடியேறின. அவற்றிற்கேற்ற வகையில் பல்வேறு பழந்தொழில்கள் நிலைமாறப் பலப்பல புதுத் தொழில்கள் இடம்பெற்றன. ஏழாம் நூற்றண்டில் தமிழ் நாட்டுக்கே முற்றும் புதியவராகிய பல்லவர் வருகை தந்து சிறக்க ஆண்ட வரலாற்றைக் காண் கின்றாேம். அக்காலத்தில் அதுவரையில் தமிழ் நாட்டில் காணமுடியாத’ குகைகளைக் குடைந்து செப்பம் செய்து அழகுபடுத்தும் ஒரு புதுவகைத் தொழில் வளரக் கண்டோம். அஜந்தா, எல்லோரா, எலிப்ண்டாவிலுள்ள குகைக் கோயில்கள் ஆகியவற்றைப்போல் அத்துணைப் பெரிய அளவில் இன்றேனும் நாட்டின் பல பாகங்களிலும் அவை உண்டாணதைக் கண்டோம். அப்படியே பல இசைக் கருவிகளும் வேறுபல் பொருள்களும் புதிதுபுதிதாக நாட்டில் உலவியதைக் காண் கின்றாேம். கோயில் அமைப்பும் அவர்கள் காலத்திலேயே மெல்ல மெல்ல மாறி ஏறக்குறைய பிற்காலச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/60&oldid=1399302" இலிருந்து மீள்விக்கப்பட்டது