பக்கம்:தொழில் வளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தொழில் வளம்



சோழர்கால அமைப்பின் போன்ற அளவில் வளரத் தொட்ங்கிற்று. எனவே சமய அடிப்படையில் எழுந்த கோயில்களும் அக்கோயில்களுக்குத் தேவையான பல உலோக் விக்கிரகங்களும், பிற பொருள்களும் உண்டாக்கத் தக்க தொழில்வளம் பெற்றிருந்தது. மேலும் அக்கோயில்களுக்கு வந்து வழிபடுபவர்கள் பலவேறு ஆடைகளையும் அணிகளையும் அணிந்திருந்தார்கள் எனக் காண்கின்றாேம். ஆடற்கலையும் பாடற்கலையும் கோயில்களில் இடம்பெற்றிருந்தன.அக்காலத்திலும் அதற்கடுத்த சில காலங்களிலும் கோயில்கள் மக்கள் மன்றங்களாக (Community Centres)மாறி நாட்டு தொழில்களையும் வளர்த்தன. அக்காலத்தில் பழம்பெருங் துறைமுகங்கள். இன்றேனும் மாமல்லபுரம் சிறந்த கடற்கரைப்பட்டினமாக விளங்கிநின்றது. கடற்கரை முழுதும் சிறுசிறு படகோடும் துறைமுகங்கள் இருந்தன என்று தேவாரங்கள் போன்ற பல் பாடல்கள் மூலம் நன்கு உணருகிறோம். நாகைப்பட்டினம் சிறந்த துறைமுகமாக அக்காலத்தில் விளங்கிற்று. புகாரில் இறங்கிய குதிரை முதலிய பிற நாட்டுப்பிராணிகளும் பிற வாசனைப் பொருள்களும் நாகையில் இறங்கின எனக் காண்கின்றாேம். அதனாலேயே அக்கரையில் நின்று பாட்டிசைத்த சுந்தரர்.

       காற்றனைய கடும்பரிமா' ஏறுவது வேண்டும்
      கடல்நாகைக் காரோணம் மேவி இருந்திரே'</poem>}}

எனவும,

       கத்துரி கமழ்சாந்தம் பணித்தருளல் வேண்டும்
       கடல்நாகைக் காரோணம் மேவியிருந்திரே'</poem>}}

எனவும் பாடினர்.

மற்றும் சம்பந்தர் பல இடங்களில் கலங்கள் உலவிய சிறப்பைப் பாடமலில்லை.


         கலங்கள் வந்துலவும் கழிப்பாலை யுளாய்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/61&oldid=1399720" இலிருந்து மீள்விக்கப்பட்டது