பக்கம்:தொழில் வளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு முன்னாளில் தொழில் வளம்

59


எனவும், இன்னும் பலவகையிலும் பாடி விளக்கியுள்ளார். அவர் பலவிடங்களில் கலங்கள் கடற்கரைப்பட்டினங்களில் நின்று பல்வேறு தொழிற்படு பொருள்களை வாணிபமாக்கிவிற்றும் பெற்றும் சென்ற காட்சியைக் காட்டுகின்றார், மற்றும் எண்ணற்ற இசைக்கருவிகளை அவர் காட்டுகின்றார். அவற்றையெல்லாம் செய்யும்,தொழிற்சாலைகள் நாடெங்கும் இருந்தன எனக் காண முடிகின்றதன்றாே இச்சிறு தொழில்கள் மட்டுமன்றி முகில்தோய் புகை கக்கும் புகைபோக்கிகளையுடைய பெருந் தொழில்களும் தஞ்சை நாட்டில் பல விடங்களில் இருந்தன எனக் காண்கின்றாேம். சிறப்பாகச் சர்க்கரை ஆலைகள் பல அக்காலத்தில் சோழ நாட்டில் இருந்திருக்க வேண்டும் எனத் தேவாரப் பாடல்களால் நன்கு அறிகிறோம். மற்றும் உழவும் அதன் வழிப் பெருகும் விளைவும் கன்கு பாராட்டப்பெறுகின்றதை அறியும்போது அக்காலத் தமிழ்நாட்டுமக்கள் உழவையும் தொழிலையும் இரு கண்ணெனக் காத்துப் போற்றி வளர்த்து, தாமும் உண்டு பொது இடமாகிய கோவில்களில் சேர்த்து இல்லாதவர்க்கு அளித்தும் பஞ்ச காலங்களில் நாட்டுக்குப் பகிர்ந்து கொடுத்தும் ஒன்றிய வாழ்வில் வாழ்ந்தார்கள் என் உணர முடிகின்றது. அத்தகைய நல்ல கூட்டு வாழ்வு இன்று நாட்டில் இல்லை என்றுகூடச் சொல்லலாம்.

பல்லவர் "காலத்தை விட்டுப் பிற்காலச் சோழர் காலத்து வருவோமாயின் வரலாற்று ஆசிரியர்கள் அக்காலத்தைப் 'பொற்கால' மெனக் கூறுவதன் காரணம் நன்கு புலனாகும். அவர்கள் உண்டாக்கி வைத்த நில அமைப்பு, நில அளவு, சமயக் கோயில்கள், அவற்றின் வழிபாட்டுமுறை, இன்ன பிற இன்றளவும் மாறாதவகையில் அப்படியே இருக்கின்றமை அறிகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/62&oldid=1399309" இலிருந்து மீள்விக்கப்பட்டது