பக்கம்:தொழில் வளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தொழில் வளம்



றோம். அக்காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் எழுப்பிய வானுேங்கிய கோயில்களை நினைத்துப் பார்க்கும் போது-அண்ணர்ந்து நோக்கும் போது நாம் மட்டுமன்றி உலக மனித சமுதாயமே பெருமை கொள்ளமுடிகின்றது. பொறியியற் கலை அக்காலத்தில் எத்துணைச் சிறந்திருக்க வேண்டும் என எண்ண. முடிகின்ற தன்றோ! வானேங்கிய கோபுரத்து உச்சியின் தளமாக ஒரு பெருங்கல்லைத் தஞ்சைக் கோயிலில் உபயோகித்திருப்பதைக் கண்டு கண்டு வியவாதார் யார்? எத்தகைய தூக்குச் சாதனங்களும் பிற வசதிகளும் இல்லாத அக்காலத்தில் இத்துணைப் பெருங் கோயில்களையும் கோபுரங்களையும் அவர்கள் எவ்வாறு கட்ட முடிந்தது? என்ற கேள்விக்கு யாரே விடைகொடுக்க முடியும்? பல நூற்றண்டுகள் கழித்தும் மங்காத ஒளி வீசிக்கொண்டிருக்கும் அத் தில்லைக் கோயிலில் அமைத்துள்ள பொற்றகட்டின் வேலைப் பாட்டினை எண்ணிப் போற்றாதிருக்க முடியுமா? கோபுரங்களிலும் கோயில்களின் சுற்றுச் சுவர்களிலும் பிற பகுதிகளிலும் அமைத்துள்ள சித்திர வேலைப்பாடுகள் தாம் எத்தகைய தொழில்திறம் வாய்ந்தவை வெண், சுதை கொண்டும் பல்வேறு வண்ணங்கள் கொண்டும் இயற்றிய பலப்பல காட்சிகள் இன்றும் நம்முன் நேற்றே செய்தன போன்று சிறக்க உள்ளன. வன்றாே ! இவைகளையன்றி வெண்கலத்தாலும் செப்பாலும் சிலைகளும் தகடுகளும் அமைத்த பெருமையும், கற்களையும் உலோகங்களையும் பேசவைக்கும் வகையில் அவற்றில் எழுத்துக்களைப் பொறித்த பெருமையும் இக்காலத்தைச் சார்ந்தனவன்றாே ருே கோயில்தோறும் நடந்த விழாக்களில்தான் எத்தனை வேலைப்பாடுகள்? மரத்தாலும் இரும்பாலும் பிற உலோகங்களாலும் அமைக்கப் பெற்ற தேர்களும் எண்ணற்ற வாகனங்களும் இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/63&oldid=1399617" இலிருந்து மீள்விக்கப்பட்டது