பக்கம்:தொழில் வளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடு முன்னாளில் தொழில் வளம்

61



றளவும் வாழ்கின்றனவே. இவ்வாறு சமய அடிப்படையில் சோழர் காலத்தில் வளர்ந்த கைத்தொழில்கள் எண்ணற்றவை.

இவர்கள் காலத்திலும் நாகைப்பட்டினம் சிறந்த துறைமுகமாக விளங்கியதையும் சீனகாடு வரையில் வாணிபம் மட்டுமன்றி அரசியல் உறவும் தொடர்பும் கொள்ள அத்துறைமுகம் பெரிதும் பயன்பட்ட தையும் காண்கின்றாேம். மற்றும் அக்காலத்தில்தானே இராஜேந்திரன் கங்கையும் கடாரமும் கொண்டு வெற்றி வேந்தனாக விளங்கினான். வடகாடுவரை படைஎடுத்து வெற்றி கொண்டான் என்றால் எத்தனை எத்தனை ஆயுதங்கள் செய்யப் பெற்றிருக்க வேண்டும்? எத்தனை எத்தனை ஆயுதத் தொழிற்சாலைகள் நாட்டில் இருந்திருக்க வேண்டும்? மற்றும் கடல்மேற் கலஞ் செலுத்திக் கடாரம் போன்ற நாடுகளை வென்றதோடு, சீன, ஶ்ரீவிஜயம் (ஜாவா) போன்ற நாடுகளோடு அரசியல் தொடர்பும் அவர்கள் கொண்டிருந்தார்களென்றால்: கப்பல் கட்டும் தொழில் எத்துணை முன்னேற்றம் பெற்றிருக்க வேண்டும் என உணரவேண்டும். வெறும் வாணிகக் கப்பல்கள் மட்டுமன்றிப் போர்க், கப்பல்களும் கட்டக் கூடிய பல பெருஞ் தொழிற்சாலைகள் தமிழ் நாட்டுக் கடற்கரையில் இருந்திருக்க வேண்டும் எனக் கொள்ளவேண்டுமல்லவா?

இவைகள் மட்டுமன்றி அக்காலத்தில் காட்டில் வீட்டுவாழ்வும் பிற பொதுவாழ்வுகளும் . எத்தனையோ புதுப்புது வகைகளில் மாறியுள்ளமையைக் காண்கின்றாேம். அதற்கேற்ற எத்தனையோ புதுப் புதுத் தொழில்கள் வளம்பெற்றிருக்க வேண்டுமல்லவா? பொன்னுல் செய்த பசுவயிற்றில் புகுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/64&oldid=1399618" இலிருந்து மீள்விக்கப்பட்டது